அயர்டன் சென்னா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அயர்டன் சென்னா
பிறப்பு(1960-03-21)21 மார்ச்சு 1960
இறப்பு1 மே 1994(1994-05-01) (அகவை 34)
பார்முலா ஒன் உலக போட்டித்தொடர் வாழ்வழி
நாடுபிரேசில் Brazilian
செயல்படும் ஆண்டுகள்19841994
அணிகள்டோல்மேன், டீம் லோட்டஸ், மெக்லாரன், வில்லியம்ஸ்
பந்தயங்கள்162 (161 starts)
பெருவெற்றிகள்3 (1988, 1990, 1991)
வெற்றிகள்41
உயர்மேடை முடிவுகள்80
மொத்த புள்ளிகள்610 (614)
துருவநிலை தொடக்கங்கள்65
அதிவேக சுற்றுகள்19
முதல் பந்தயம்1984 Brazilian Grand Prix
முதல் வெற்றி1985 Portuguese Grand Prix
கடைசி வெற்றி1993 Australian Grand Prix
கடைசி பந்தயம்1994 San Marino Grand Prix

அயர்டன் சென்னா (Ayrton Senna பிரேசிலிய போர்த்துக்கீசம்: [aˈiʁtõ ˈsẽnɐ dɐ ˈsiwvɐ]  ( கேட்க); மார்ச்-21, 1960 - மே-1, 1994) என்பவர் பிரேசில் நாட்டைச் சேர்ந்த கார்பந்தய வீரராவார். இவர் பார்முலா 1 போட்டித்தொடரை 1988, 1990 மற்றும் 1991 ஆகிய ஆண்டுகளில் "மெக்லாரன்" அணிக்காக வென்றுள்ளார். பார்முலா 1 போட்டித்தொடர் வரலாற்றின் பெருவெற்றியாளர்களில் இவர் முதன்மையானவராகக் கருதப்படுகிறார்.[1][2][3] வில்லியம்சு அணிக்காக பங்கேற்ற 1994ஆம் ஆண்டு "சான் மரினோ கிராண்ட் ப்ரீ" போட்டியில் நிகழ்ந்த விபத்தில் காலமானார்.[4]

பல்வேறு கார்பந்தய வாக்கெடுப்புகளில் மிகச் சிறந்த மற்றும் மிகவும் செல்வாக்கான பார்முலா 1 கார்பந்தய வீரராக அயர்டன் சென்னா தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்.[5][6][7][8] இவர் போட்டிக்குத் தகுதிபெறும் ஒற்றைச் சுற்றில் கார் ஓட்டும் வேகத்தில் சிறந்தவராவார், 1988 முதல் 2006ஆம் ஆண்டுவரை அதிகமுறை பார்முலா 1 போட்டியை முதல் இடத்தில் இருந்து துவக்குதலில் சாதனையை வைத்திருந்தார். மேலும் இவரது மழைக்கால போட்டியோட்டத்துக்காகவும் சிறப்பான முக்கியத்துவம் பெறுகிறார், அவற்றுள் சில: 1984 மொனாகோ கிராண்ட் ப்ரீ, 1985 போர்த்துக்கீசிய கிராண்ட் ப்ரீ மற்றும் 1993 ஐரோப்பிய கிராண்ட் ப்ரீ. "மொனாகோ கிராண்ட் ப்ரீ" போட்டியில் ஆறுமுறை வென்று சாதனைபுரிந்துள்ளார். வரலாற்றில் அதிக போட்டிகள் வென்ற பார்முலா 1 வீரர்கள் பட்டியலில் ஐந்தாவது இடத்தில் இருக்கிறார்.

மேலும் பார்க்க[தொகு]

உசாத்துணைகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=அயர்டன்_சென்னா&oldid=2721608" இருந்து மீள்விக்கப்பட்டது