அம்பா மலைக்கணவாய்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அம்பா கணவாய்
Stream MH Kolhapur.jpg
கணவாய்க்கு அருகில் அம்பா குக்கிராமத்திற்கு அருகில் ஒரு ஓடை.
அமைவிடம்மகாராட்டிரம், இந்தியா
மலைத் தொடர்மேற்குத் தொடர்ச்சி மலை

அம்பா மலைக்கணவாய்  (Amba Ghat) என்பது இந்தியாவின், மகராட்டிர மாநிலம் இரத்தினகிரி-கோலாப்பூர் சாலையில் அமைந்துள்ள ஒரு கணவாய் ஆகும். இந்த சாலை கடல் மட்டத்திலிருந்து 2000அடி உயரத்தில் அமைந்துள்ளது.[1] இக்கணவாய் சகாயத்திரி மலைத்தொடரில் (மேற்குத் தொடர்ச்சி மலைகள்) அமைந்துள்ளது. மேலும், இம்மலை கண்களை கவரும்படியாகவும், இரம்மியமான காலநிலையையும் கொண்டது. இது கோலாப்பூர் மாவட்டத்தின் ஷாஹுவாடிக்கு அருகில் அமைந்துள்ளது.[2]  பாவன்கிந்து மற்றும் விசால்காத் ஆகியவை அருகே உள்ள புகழ் பெற்ற இடங்களாகும். கொல்காப்பூரில் வசிப்பவர்களுக்கு ஒரு சிறந்த சுற்றுலாத்தளமாகும்.

இப்பகுதி பாராகிளைடிங் விளையாட்டுக்கான இடமாகவும் மாறியுள்ளது.[3]

குறிப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=அம்பா_மலைக்கணவாய்&oldid=3414494" இருந்து மீள்விக்கப்பட்டது