அம்பாரகுத்தா மலை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

அம்பாரகுத்தா மலை (Ambaragudda) இந்திய மாநிலமான கர்நாடகாவின் சாகரா தாலுகாவில் குடசாத்ரிக்கு அருகில் மராட்டி என்று பெயரிடப்பட்ட மேற்கு தொடர்ச்சி மலை கிராமத்தில் உள்ளது. 250 எக்டேர் (620 ஏக்கர்) பரப்பளவில் அமைந்துள்ள இம்மலையில் மழைக்காடுகள் நிரம்பியுள்ளன. இங்கு மேற்கொள்ளப்படும் சுரங்க நடவடிக்கைகள் எதிர்ப்புக்களை ஈர்த்துள்ளன.[1] கர்நாடக அரசு இம்மலைப்பகுதியை 2009 ஆம் ஆண்டு மேற்கு தொடர்ச்சி மலைப் பிராந்தியத்தின் இயற்கை பாரம்பரிய தளமாக அறிவித்தது.[2][3]

அம்பாரகுத்தா மலை சராவதி பள்ளத்தாக்கின் ஒரு பகுதியாகும், இது இலிங்கனமக்கி நீர்மின் அணைக்கு அருகில் அமைந்துள்ளது இம்மலையும் அம்மானகட்டா மலைத்தொடரும் சராவதி ஆற்றின் ஐந்து துணை நதிகளை உருவாக்குகின்றன.[2]

சுரங்கத் தொழில்[தொகு]

சுற்றியுள்ள மலைப்பகுதிகளுக்கு பெரிய சேதம் ஏற்படுவதால், சுரங்கத் தொழிலை உள்ளூர் மக்களும், ராகவேசுவர பாரதி போன்ற சுற்றுச்சூழல் ஆர்வலர்களும் எதிர்க்கின்றனர்.[4] உள்ளூர் மக்கள் 2005 ஆம் ஆண்டில் இங்கு நடைபெற்றுவந்த சுரங்க நடவடிக்கைகளை நிறுத்தினர்.[4] காடுகளால் மூடப்பட்டிருந்தாலும், மலை தரிசாக இருப்பதாக சுரங்க நிறுவனம் நீதிமன்றத்திற்கு தவறான தகவல்களை வழங்கியதாகக் கூறப்பட்டது இதற்கான காரணமாகும்.[4] சில சுரங்க நிறுவனங்கள் 2004 ஆம் ஆண்டில் இங்கு சட்டவிரோதமாக சுரங்க நடவடிக்கைகளை மேற்கொண்டன.[5] அம்பாகுத்தா மற்றும் குடசாத்ரி மலைத்தொடரில் உள்ள அனைத்து சுரங்க நடவடிக்கைகளையும் எதிர்த்து உள்ளூர் மக்கள் "குடசாத்ரி சஞ்சீவினி" என்ற பெயரில் ஒரு முன்னணி அமைப்பை அமைத்துள்ளனர்.[4]

மேற்கோள்கள்[தொகு]

  1. TNN (18 October 2009). "Plea to stop mining in Western Ghats". The Times of India. http://articles.timesofindia.indiatimes.com/2009-10-18/mysore/28081183_1_mining-activities-task-force-villagers. பார்த்த நாள்: 5 October 2012. 
  2. 2.0 2.1 "Natural heritage site tag for Ambaragudda, Ammanaghatta". The Hindu. 16 February 2009. http://www.hindu.com/2009/02/16/stories/2009021655680300.htm. பார்த்த நாள்: 5 October 2012. 
  3. Kaggere, Niranjan (2012). "Kodachadri now a Heritage site". Times of India- mobile e paper. http://mobilepaper.timesofindia.com/mobile.aspx?article=yes&pageid=10&sectid=edid=&edlabel=BGMIR&mydateHid=30-07-2010&pubname=Mirror+-+Bangalore&edname=&articleid=Ar01000&publabel=MM. பார்த்த நாள்: 5 October 2012. 
  4. 4.0 4.1 4.2 4.3 Special, Correspondent (17 August 2005). "Andolan seeks restoration of ban on mining at Ambargudda". Bangalore: The Hindu. பார்த்த நாள் 5 October 2012.
  5. Basavaraj Sampalli, P.N.Narasimhamurthy (6 July 2004). "Dynamites & JCBs greet you at this bio-diversity hotspot". Deccan Herald (Spectrum). http://archive.deccanherald.com/deccanherald/july062004/spt2.asp. பார்த்த நாள்: 5 October 2012. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=அம்பாரகுத்தா_மலை&oldid=3069199" இருந்து மீள்விக்கப்பட்டது