அம்பலம

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
கிருவா அம்பலம, அளுத்நுவர

அம்பலம (சிங்களம்: අම්බලම, ஆங்கிலம்:Ambalama) என்பது சிங்கள மொழியில் யாத்திரீகர்களும், வழிப்போக்கர்களும் தங்கி இளைப்பாறுவதற்காக அமைக்கப்பட்ட ஒரு கட்டிடத்தைக் குறிக்கும்.[1] இது தமிழ்நாட்டில் காணப்படும் சாலையோரத் தங்கு மடங்களுக்கு ஒப்பானது. இவற்றில் தங்குவதற்குக் கட்டணங்கள் அறவிடப்படுவதில்லை.[2]

பெயர்[தொகு]

அம்பலம என்னும் சிங்களச் சொல் அம்பலம் என்னும் தமிழ்ச் சொல்லிலிருந்து பெறப்பட்டது. தமிழில் அம்பலம் என்னும் சொல்லுக்குப் பொது மண்டபம் அல்லது பொது இடம் என்னும் பொருள் உண்டு. இந்தப் பொருளிலேயே அம்பலம என்னும் சிங்களச் சொல் உருவாகிச் சாலையோரத் தங்கு மடங்களைக் குறிக்கப் பயன்பட்டுவருகிறது. சிங்களச் சொற்கள் ம், ன் போன்ற மெய்யெழுத்துக்களில் முடிவதில்லை. அவ்வாறான சொற்களைக் கடன்வாங்கிச் சிங்களமாக்கும்போது இறுதி மெய்யெழுத்து அகரம் ஏற்கிறது. இதனாலேயே அம்பலம் என்பதன் இறுதி ம், ஆகி அம்பலம ஆனது.

அமைப்பு[தொகு]

இலங்கையின் சிங்களப் பகுதிகளில் பல பழங்கால அம்பலம கட்டிடங்கள் காணப்படுகின்றன. பல அம்பலம கட்டிடங்கள் ஒரு மேடைமீது நாட்டப்பட்ட தூண்களின்மீது தாங்கப்பட்ட கூரையைக் கொண்ட எளிமையான திறந்த அமைப்புக் கொண்டவை. பழைய காலத்து அம்பலம கட்டிடங்கள் மரத்தூண்களையும் மரத்தாலான கூரைச் சட்டகங்களையும் கொண்டவை. சில அம்பலம கட்டிடங்களின் தளமும் மரத்தாலானவை. கரகககெதர அம்பலம இவ்வாறான கட்டிடத்துக்கு எடுத்துக்காட்டு. எளிமையான கட்டிடங்களாக இருந்தாலும், பழைய அம்பலம கட்டிடங்கள் பல சிங்களக் கட்டிடக்கலைப் பாணியைப் பிரதிபலிக்கும் வகையிலான சிறந்த மரவேலைப்பாடுகளுடன் கூடியவை.

எடுத்துக்காட்டுகள்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

வெளியிணைப்புக்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=அம்பலம&oldid=2222116" இருந்து மீள்விக்கப்பட்டது