அமோச் யாகோபு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அமோச் யாகோபு
Amoj Jacob
2017 ஆம் ஆண்டில் அமோச் யாகோபு
தனித் தகவல்கள்
பிறந்த நாள்2 மே 1998 (1998-05-02) (அகவை 25)
பிறந்த இடம்தில்லி, இந்தியா
உயரம்1.78 மீ[1]
விளையாட்டு
நாடு இந்தியா
விளையாட்டுதடகளம்
நிகழ்வு(கள்)400 மீட்டர்கள், 800 மீட்டர்கள்
சாதனைகளும் பட்டங்களும்
தன்னுடைய சிறப்பானவை400m: 45.68 (2021)
 
பதக்கங்கள்
ஆண்கள் தடகள விளையாட்டு
நாடு  இந்தியா
ஆசிய தடகள வெற்றியாளர்
தங்கப் பதக்கம் – முதலிடம் 2017 ஆசிய தடகள போட்டி, புவனேசுவர் 4 × 400m தொடரோட்டம்
ஆசிய இளையோர் வெற்றியாளார்
தங்கப் பதக்கம் – முதலிடம் 2016 ஆசிய இளையோர் வெற்றியாளார் ஓச்சிமின் நகரம்
வெள்ளிப் பதக்கம் – இரண்டாமிடம் 2016 ஆசிய இளையோர் வெற்றியாளார் ஓச்சிமின் நகரம்

பி.ஏ. அமோச் யாகோபு (P. A. Amoj Jacob) இந்தியாவைச் சேர்ந்த ஒரு தடகள விளையாட்டு வீர்ராவார். 400 மீ ஓட்டப் பந்தயம், 800 மீ ஒட்டப் பந்தயம் போன்ற விளையாட்டுகளில் இவர் இந்தியாவின் சார்பாகப் பங்கேற்று விளையாடி வருகிறார்.

2017 ஆம் ஆண்டு நடைபெற்ற ஆசிய தடகள வெற்றியாளர் போட்டியில் 4 × 400 மீ தொடரோட்டப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற இந்திய அணியில் இவரும் ஓர் உறுப்பினராக இருந்தார். குங்கு முகம்மது, ஆரோக்கிய இராசீவ், முகமது அனாசு ஆகியோர் இவருடன் ஓடிய பிற உறுப்பினர்களாவர். இவர்கள் 3:02.92 விநாடிகள் நேரத்தில் பந்தயத் தொலைவைக் கடந்து இந்தியாவிற்கு தங்கப் பதக்கம் பெற்றுக் கொடுத்தனர். 1975 ஆம் ஆண்டு சியோல் போட்டிக்குப் பின்னர் இந்தியா இப்போட்டியில் தங்கப் பதக்கம் வென்றது.[2] உலகில் ஆறாவது மிக்க் குறைந்த நேரம் என்ற இவ்வெற்றியின் அடிப்படையில் 2017 ஆம் ஆண்டுக்கான உலக தடகள வெற்றியாளர் போட்டிக்கு இந்தியா தகுதி பெற்றது.[3]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Ashgabat 2017 bio". ashgabat2017.com. பார்க்கப்பட்ட நாள் 23 September 2017.[தொடர்பிழந்த இணைப்பு]
  2. "Asian Athletics Championships 2017: Deconstruction of the gold standard". The Indian Express. 12 July 2017. http://indianexpress.com/article/sports/sport-others/asian-athletics-championships-2017-deconstruction-of-the-gold-standard-4746739/. பார்த்த நாள்: 13 August 2017. 
  3. Ryan, Stan (5 August 2017). "India at the London World Athletics Championships". The Hindu. http://www.thehindu.com/sport/athletics/india-at-the-worlds/article19430591.ece. பார்த்த நாள்: 13 August 2017. 

புற இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=அமோச்_யாகோபு&oldid=3231762" இலிருந்து மீள்விக்கப்பட்டது