அமேடிக் விரிகுடா
Appearance
அமேடிக் விரிகுடா (Amatique bay) கரிபியக் கடலில் உள்ள ஹோண்டுராஸ் வளைகுடாவின் உட்பகுதியாகும். இது வட கிழக்கிலுள்ள குவாத்தமாலாவிற்கும், தென்கிழக்கில் உள்ள பெலீசுக்கும் இடையில் அடங்குகிறது. இது குவாத்தமாலாவிலுள்ள சாண்டோ தோமாஸ் (காஸ்டில்லோ) இடத்திலிருந்து வடமேற்காக 64 கி.மீ. வரையிலும் வடகிழக்கிலிருந்து தென்மேற்காக 24 கி.மீ வரையிலும் பரவியுள்ளது. இவ்விரிகுடாவில் ரியோடல்ஸ், சர்ஸ்டூன், மோஹே ஆகிய ஆறுகள் கலக்கின்றன. போர்டோ பேரியோஸ் சான்டோ தோமாஸ் (காஸ்டில்லோ), லிவிங்ஸ்டன், புன்டா கோர்டா ஆகியவை இவ்விரிகுடாவின் முக்கிய துறைமுகங்களாகும்.
ஆக்குநர்சுட்டு
[தொகு]- அறிவியல் களஞ்சியம் - தொகுதி ஒன்று. தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகம் வெளியீடு. தமிழக அரசின் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறையின் அரசாணை எண் 105ன் படி CC-BY-SA உரிமத்தின் கீழ் வழங்கப்படுகிறது.