அமெரிக்க குடும்ப அமைப்பு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஐக்கிய அமெரிக்க மக்கள் தாங்கள் பெற்றெடுத்த பிள்ளைகளுக்கு பாதுகாப்பு மற்றும் நிலைத்தன்மை வழங்கும் இரண்டு நபர்கள் தொடர்புடைய ஒரு பாரம்பரிய குடும்ப ஆதரவு அமைப்பே அமெரிக்க குடும்ப அமைப்பு (American family structure) ஆகும். பெற்றோர் குழந்தைகள் மட்டும் கொண்ட குடும்பம் கருக்குடும்பம் எனப்படும். இவ்வமைப்பு உடைய குடும்ப அமைப்பு அமெரிக்காவில் குறைவாகவே உள்ளது. மாமா, அத்தை, தாத்தா, பாட்டி ஆகிய உறவுகளை உள்ளடக்கிய குடும்ப அமைப்பு கூட்டுக் குடும்பம் ஆகும்.

மணமுறிவு, பதின்மவயது மகப்பேறு, ஒரு பெற்றோர் குடும்பங்கள், திருமணமாகாத தாய்மார்கள், ஓரினச்சேர்க்கை மற்றும் ஒரே பாலின திருமணம் ஆகியன காலப் போக்கில் அதிகரித்தது. இவை காரணமாக அமெரிக்க குடும்ப அமைப்பு மாறுதலுக்கு ஆளாகியுள்ளது.

குடும்பங்களை நான்கு வகையாக பிரிக்கலாம் .அவையாவன கருக்குடும்பம் ,கூட்டு குடும்பம், படி நிலை குடும்பம் மற்றும் ஒற்றை பெற்றோர் குடும்பம் ஆகும். கருக்குடும்பம் என்பது அம்மா, அப்பா, மற்றும் குழந்தைகள் கொண்டது. ஒற்றை பெற்றோர் குடும்பம் என்பது தனது துனைகளது உதவியின்றி தமது பிள்ளைகளை பராமரிப்பது ஆகும் .கூட்டு குடும்பம் என்பது தாத்தா, அத்தைகள், மாமாக்கள், மற்றும்சகோதர, சகோதரிகள் ஆகியோரை கொண்டது ஆகும்