அமெரிக்க இதய செயலிழப்பு சங்கம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அமெரிக்க இதய செயலிழப்பு சங்கம்
Heart Failure Society of America
உருவாக்கம்1995
நோக்கம்இதய செயலிழப்பின் சுமையைக் குறைப்பது
தலைவர்
இராந்தால் சி இசுடார்லிங்கு (2018)

அமெரிக்க இதய செயலிழப்பு சங்கம் (Heart Failure Society of America) என்பது இதய செயலிழப்பு மற்றும் இதய செயலிழப்பில் ஆர்வம் கொண்ட இதய செயலிழப்பு நிபுணர்களின் அமெரிக்க அமைப்பாகும். 1995 ஆம் ஆண்டு இச்சங்கம் நிறுவப்பட்டது, [1] இதய செயலிழப்பின் சுமையைக் குறைக்கும் நோக்கில் நிபுணர்களும் நோயாளிகளும் சேர்ந்த ஒரு மன்றத்தை இவ்வமைப்பு வழங்குகிறது. [2] டக்ளசு எல். மான் இச்சங்கத்தின் தலைவராக பணியாற்றியபோது இதய செயலிழப்பு பயிற்சி வழிகாட்டுதல்கள் உட்பட இதய செயலிழப்பை வகைப்படுத்துவதற்கான விரிவான ஆலோசனைகளை சங்கம் 2010 ஆம் ஆண்டு உருவாக்கியது 2013 ஆம் ஆண்டு இதய செயலிழப்பு மேலாண்மைக்கான வழிகாட்டியையும் இச்சங்கம் உருவாக்கியது. [3] 2018 ஆம் ஆண்டு மேம்பட்ட இதய செயலிழப்புக்கு உள்ளானோர் மற்றும் இருதயவியல் நிபுணர்களின் பல்வேறு நிலைகளில் உள்ளவர்களை இணைத்து ஒரு மன்றம் உருவாக்கப்பட்டது. 2016 ஆம் ஆண்டு தலைவராக இருந்த மன்தீப் ஆர் மெக்ரா உள்ளிட்ட பலர் கடந்தகாலத்தில் இவ்வமைப்பில் தலைவர்களாக இருந்துள்ளனர்.[4]

மேற்கோள்கள்[தொகு]

  1. "HFSA Website".
  2. "PAN Foundation - Heart Failure Society of America". panfoundation.org (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 12 November 2018.
  3. Wilcox, Jane; Yancy, Clyde W (2018). "Stopping medication for heart failure with improved ejection fraction" (in en). The Lancet 0 (10166): 8–10. doi:10.1016/S0140-6736(18)32825-3. பன்னாட்டுத் தர தொடர் எண்:0140-6736. பப்மெட்:30429051. https://www.thelancet.com/journals/lancet/article/PIIS0140-6736(18)32825-3/fulltext. 
  4. Administrator. "Dr Mandeep Mehra". www.mgims.ac.in (in பிரிட்டிஷ் ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 12 November 2018.