அமெரிக்க அணுக்கரு மருத்துவ அறிவியல் வாரியம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

அமெரிக்க அணுக்கரு மருத்துவ அறிவியல் வாரியம் (American Board of Science in Nuclear Medicine) 1976 ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. சுருக்கமாக இது அ.அ.ம.அ. வாரியம் என்று அறியப்படுகிறது. வட அமெரிக்காவில் உள்ள இந்நிறுவனம் மேம்பட்ட அணுக்கரு மருத்துவத்தின் சிறப்புப் பகுதிகளுக்குச் சான்றிதழை வழங்கும் ஓர் அமைப்பாக செயல்படுகிறது.

அமெரிக்க அணுக்கரு மருத்துவ அறிவியல் வாரியம் பின்வரும் பகுதிகளில் சான்றிதழை வழங்குகிறது:[1]

  • அணுக்கரு மருத்துவ இயற்பியல் மற்றும் கருவியாக்கம்
  • கதிரியக்க மருந்து அறிவியல்
  • கதிர்வீச்சு பாதுகாப்பு
  • மூலக்கூறு படமாக்கல்

அமெரிக்க அணுக்கரு மருத்துவ அறிவியல் வாரியத்திற்கு அணுக்கரு மருத்துவம் மற்றும் மூலக்கூறு படமாக்கல் சங்கமும் அமெரிக்க அணுக்கரு மருத்துவர்கள் மற்றும் அமெரிக்க அணுக்கரு மருத்துவக் கல்லூரியும் இணைந்து நிதியுதவி அளிக்கின்றன.[2] மேலும் அணுக்கரு மருத்துவத்தில் இயற்பியலாளர்களுக்கு சான்றளிக்கப்படும் அமெரிக்க கதிரியக்க வாரியத்திற்கு இணையான வாரியத் தகுதியையும் இவ்வமைப்பு வழங்குகிறது.[3] கல்வித் தேவைகள், தொழில்முறை சக மதிப்பீடு மற்றும் தேர்வு ஆகியவற்றை உள்ளடக்கிய ஒரு விரிவான செயல்முறையின் மூலம் அமெரிக்க கதிரியக்க வாரியம் தனது பட்டய மாணவர்களுக்கு சான்றளிக்கிறது.[3]

அமெரிக்க அணுக்கரு மருத்துவ அறிவியல் வாரியம் அதிகாரப்பூர்வமாக அமெரிக்க இயற்பியலாளர்கள் சங்கம்,[4] அமெரிக்கன் கதிரியக்கக் கல்லூரி,[5] மற்றும் அணுசக்தி ஒழுங்குமுறை ஆணையம் ஆகியவற்றால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.[6]

மேற்கோள்கள்[தொகு]

  1. "American Board of Science in Nuclear Medicine - Examination & Certification". Archived from the original on 2016-05-07. பார்க்கப்பட்ட நாள் 2016-06-26.
  2. "American Board of Science in Nuclear Medicine - Organization". Archived from the original on 2015-06-09. பார்க்கப்பட்ட நாள் 2016-06-26.
  3. 3.0 3.1 "Scientist Certification and Licensure". Archived from the original on 2016-08-06. பார்க்கப்பட்ட நாள் 2016-06-26.
  4. "AAPM Position Statements, Policies and Procedures - Details". www.aapm.org.
  5. "Archived copy" (PDF). Archived from the original (PDF) on 2016-06-10. பார்க்கப்பட்ட நாள் 2016-06-26.{{cite web}}: CS1 maint: archived copy as title (link)
  6. "NRC: Specialty Board(s) Certification Recognized by NRC Under 10 CFR Part 35". www.nrc.gov.