அமெரிக்கன் எயர்லைன்ஸ் வானூர்தி 1 (1936)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அமெரிக்கன் எயர்லைன்ஸ் வானூர்தி 1 (1936)
விபத்தான வானூர்தி போன்ற (டக்ளஸ் டி-சி 2) ஒரு படிமம்
விபத்து சுருக்கம்
நாள்சனவரி 14, 1936 (1936-01-14)
சுருக்கம்தீர்மானிக்க முடியாதது
இடம்குட்வின், ஆர்கன்சாஸ் அருகில்,  ஐக்கிய அமெரிக்கா
பயணிகள்14
ஊழியர்3
உயிரிழப்புகள்17 (அனைவரும்)
தப்பியவர்கள்0
வானூர்தி வகைடக்ளஸ் டி-சி 2-120
இயக்கம்அமெரிக்கன் எயர்லைன்ஸ்
வானூர்தி பதிவுNC14274
பறப்பு புறப்பாடுமெம்ஃபிஸ் மாநகர விமான நிலையம், மெம்ஃபிஸ், டென்னிசி,  ஐக்கிய அமெரிக்கா
சேருமிடம்லிட்டில் ராக் தேசிய விமான நிலையம், லிட்டில் ராக்,  ஐக்கிய அமெரிக்கா

அமெரிக்கன் எயர்லைன்ஸ் வானூர்தி 1 (American Airlines Flight 1 (1936) எனும் பெயரிடப்பட்ட இது, ஒரு வானூர்தி விபத்தின் சம்பவமாகும். 1936-ம் ஆண்டு, சனவரி 14-ல் நிகழ்ந்த இச்சம்பவத்தில், மூன்று சேவைப் பணியாளர்கள் உட்பட 17 பேர்கள் (பயணித்த அனைவரும்) கொல்லப்பட்டனர். அமெரிக்கன் எயர்லைன்ஸ் நிறுவனத்தின் கீழ் இயக்கப்பட்ட "டக்ளஸ் டி-சி 2" (Douglas DC-2) வகையை சார்ந்த இவ்வானூர்தி, திட்டமிடப்பட்ட பயணப்படி உள்ளூர் பயணிகளுடன் அமெரிக்காவின் டென்னசி மாநிலத்திலுள்ள மெம்ஃபிஸ் நகரிலிருந்து, அமெரிக்காவின் மற்றொரு பிராந்தியமான ஆர்கன்சஸ் மாநிலத்தின் தலைநகர் லிட்டில் ராக் மாநகரத்திற்கு சென்றுகொண்டிருந்தபோது "குட்வின், ஆர்கன்சாஸ்" (Goodwin, Arkansas) என்ற பகுதி அருகே சதுப்பு நிலத்தில் மரங்களில் மோதி சிதைந்து விழுந்து நொறுங்கியதாக அறியப்பட்டது.[1]

சான்றாதாரங்கள்[தொகு]

  1. "ACCIDENT DETAILS". www.planecrashinfo.com (ஆங்கிலம்) - Richard Kebabjian. பார்க்கப்பட்ட நாள் 2016-08-29.