அமிர்தன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

கவிஞர் அமிர்தன் (இயற்பெயர்: கா. சுப்ரமணியன், 8 சூன் 1982) என்பவர் தமிழ் திரைப்படப் பாடலாசிரியரும் கவிஞரும் ஆவார்.

பிறப்பும் கல்வியும்[தொகு]

இவர் 1982 ஆம் ஆண்டு சூன் மாதம் 8 ஆம் நாள் திருவண்ணாமலை மாவட்டம், கீழ்கரிப்பூர் என்ற கிராமத்தில் காந்தி, வள்ளியம்மாள் இணையருக்கு மகானக பிறந்தார். இவர் தன் பள்ளிப்படிப்பை 1986 முதல் 1991 வரை கீழ்கரிப்பூர் அரசு நடுநிலை பள்ளியிலும், 1992 முதல் 1998 வரை வேட்டவலம் அரசு ஆண்கள் பள்ளியிலும் கற்றார். 1999 முதல் 2004 வரை சென்னை அரசு அம்பேத்கர் சட்டக்கல்லூரியில் இளங்கலை சட்டமும் 2005 முதல் 2007 வரை முதுகலை சட்டப் படிப்பும் கற்றார். மேலும் பெங்களூரு நேசனல் லா ஸ்கூல் ஆப் இந்தியா யுனிவேர்சிட்டி, தில்லி பல்கலைக்கழகம், மதுரை காமராஜர் பல்கலை கழகம் , தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கார் பல்கலைகழகம் மற்றும் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் அஞ்சல் வழியில் எம்.எ, எம்.பி.எ மற்றும் பட்டய படிப்புகளை முடித்து பல்வேறு பட்டம் பெற்றுள்ளார்.

பாடலாசிரியராக[தொகு]

இயக்குனர் மாதேஸ்வராவின் ‘சாதனை பயணம் ‘ என்ற படத்தில் முதலில் ‘வானம் வசப்படும்’ என்ற பாடலின் மூலம் பாடலாசிரியராக அறிமுகமானார். 2019 ஆண்டுவரை சுமார் 13 திரைப்பட பாடல்கள் எழுதியுள்ளார். மேலும் ‘மலையே மகேசா’ மற்றும் ‘பஞ்சபூதன்’ என்ற பக்தி ஆல்பத்தையும் வெளியிட்டுள்ளார். இதுவரை 50 க்கும் மேற்பட்ட பக்தி பாடல்களை எழுதியுள்ளார். கடந்த 2011 ஆம் ஆண்டு ‘ கனவுகள் விற்பவன் என்ற கவிதை நூலையும் எழுதி வெளியிட்டுள்ளார். பாடலாசிரியராகத் திரைப்படத்துறைக்குள் நுழைந்த இவர் தொடர்ந்து இசையமைப்பாளர் பரத்வாஜ் , இசையரசர் தஷி , இசையமைப்பாளர் காந்திதாசன், இசையமைப்பாளர் ராம்ஜி ஆகியோரது இசையில் தமிழ்த் திரைப்படங்கள், ஆல்பம் என தொடர்ந்து பாடல்களை எழுதி வருகிறார்..

விருதுகள்[தொகு]

2019 ஆம் ஆண்டுக்கான ‘கவிமாமணி’ விருதை சிறந்த பக்தி பாடலாசிரியருக்கான தனது ‘அன்னையே அங்காளி’ என்ற ஆல்பத்துக்காக குலோபல் பீஸ் யூனிவர்சிட்டி இவருக்கு வழங்கியுள்ளது.

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=அமிர்தன்&oldid=2795918" இருந்து மீள்விக்கப்பட்டது