அமினோபாசுபோனேட்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

அமினோபாசுபோனேட்டுகள் (Aminophosphonates) என்பவை (RO)2P(O)CR'2NR"2. என்ற பொது மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் கரிமபாசுபரசு சேர்மங்களாகும் அமினோ அமிலங்களின் கட்டமைப்பை ஒத்த வரிசைச் சேர்மங்கள் என இவை வகைப்படுத்தப்படுகின்றன. அமினோ அமிலங்களில் உள்ள கார்பாக்சிலிக் மையம் அமினோபாசுபோனேட்டுகளில் பாசுபோனிக் அமிலம் அல்லது தொடர்புடைய குழுக்களால் இடப்பெயர்ச்சி செய்யப்பட்டிருக்கும் [1]. அமினோ அமிலங்களின் எதிர்ப்பு மருந்தாக இவை அமினோ அமிலங்களின் வளர்சிதை மாற்றத்தில் நொதிகளை எதிர்ப்பதில் பங்கேற்கின்றன. எனவெ செல்களின் உயிர்வினையியல் நடவடிக்கைகளை பாதிக்கின்றன.

நுண்ணுயிர் எதிர்ப்பிகள், செடி வளர்ச்சி ஒழுங்குமுறை அல்லது நரம்பணு பண்பேற்றம் போன்றவற்றுக்கும் இந்த விளைவுகள் நீட்சியடையலாம். அவை ஈந்தணைவிகளாக செயல்படலாம். அமினோபாசுபோனேட்டுகளுடன் கன உலோகங்கள் சேர்ந்து உருவாகும் அணைவுச் சேர்மங்கள் மருத்துவப் பயன்களுக்காக ஆராயப்படுகின்றன [2]

அலானைலானின் சேர்மத்தின் கட்டமைப்பை ஒத்தவரிசை சேர்மம் அலாபோசுபாலின். இது மருத்துவ முக்கியத்துவம் வாய்ந்த ஒரு அமினோபாசுபோனேட்டு

பாசுபேட்டுகளைக்காட்டிலும் பாசுபோனேட்டுகளை நீராற்பகுப்பது மிகவும் கடினமாகும்.[3].

தயாரிப்பு[தொகு]

இமீன்களுடன் பாசுபரசு அமிலம் சேர்த்து வினைபுரியச் செய்யும் புதோவிக் வினை அல்லது கபாச்னிக்-பீல்ட்சு வினையின் மூலம் பெரும்பாலும் அமினோபாசுபேனேட்டுகள் தயாரிக்கப்படுகின்றன. பொதுவாக டைபீனைல்பாசுபைட்டு போன்ற பாசுபரசு அமிலத்தின் எசுத்தர்கள் இவ்வினையில் ஈடுபடுத்தப்படுகின்றன. ஏனெனில் இவை மருத்துவப் பயன்பாடுகளைக் கொண்டுள்ளவையாகும். இத்தகைய சேர்க்கை வினைகள் நிகழ்வதைத் தூண்டும் வகையில் சமச்சீரற்ற புதிய முறைகள் உருவாக்கப்படுகின்றன [1].

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 Pedro Merino; Eugenia Marqués-López; Raquel P. Herrera (2008). "Catalytic Enantioselective Hydrophosphonylation of Aldehydes and Imines". Advanced Synthesis & Catalysis 350: 1195–1208. doi:10.1002/adsc.200800131. 
  2. Tušek-Božić, LJ (2013). "Aminophosphonate metal complexes of biomedical potential.". Current Medicinal Chemistry 20 (16): 2096–117. பப்மெட்:23432587. 
  3. Orsini, F; Sello, G; Sisti, M (2010). "Aminophosphonic acids and derivatives. Synthesis and biological applications.". Current Medicinal Chemistry 17 (3): 264–89. பப்மெட்:20214568. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=அமினோபாசுபோனேட்டு&oldid=2750165" இலிருந்து மீள்விக்கப்பட்டது