அமிக்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அமிக்
Amik-SummerOlympics1976.svg
1976 கோடை ஒலிம்பிக் சின்னம் (மொண்ட்ரியால்)
தோற்றுவித்தவர்அமிக், ஜார்ஜஸ் ஹூயலின் வழிகாட்டுதலின்கீழ் கை செயின்ட்-அர்னாட், யுவன் லாரோச் மற்றும் பியர்-யவ்ஸ் பெல்லெட்டியர்
முக்கியத்துவம்நீரெலி

1976 கோடைக்கால ஒலிம்பிக்கின் சின்னம் அமிக் (Amik) ஆகும். அல்கொன்கின் மொழியில், அமிக் என்றால் "நீரெலி" என்று பொருள். இதற்குப் பெயரிடத் தேசிய அளவில் போட்டி ஒன்று நடைபெற்றது. இப்போட்டியின் முடிவில் “நீரெலி” அல்லது "அமிக்" சின்னமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டது, ஏனெனில் இது இப்போட்டியினை நடத்திய நாடான கனடாவுடன் தொடர்புடைய ஒரு விலங்காகும். நீரெலி என்பது கடின உழைப்பையும் குறிப்பதாகும்.[1]

மொண்ட்ரியால் ஒலிம்பிக்கின் சின்னத்துடன் சிவப்பு பட்டை அல்லது மொண்ட்ரியால் ஒலிம்பிக் அமைப்புக் குழுவைக் குறிக்கும் பல வண்ண நாடாவுடன் அமிக் வலம் வந்தது. அமிக், ஜார்ஜஸ் ஹூயலின் வழிகாட்டுதலின்கீழ் கை செயின்ட்-அர்னாட், யுவன் லாரோச் மற்றும் பியர்-யவ்ஸ் பெல்லெட்டியர் ஆகியோரால் வடிவமைக்கப்பட்டது.[1]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 "Montreal 1976 Mascots". International Olympic Committee. 3 June 2018 அன்று பார்க்கப்பட்டது.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அமிக்&oldid=3396447" இருந்து மீள்விக்கப்பட்டது