அமலானந்தா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அமலானந்தா
சுய தரவுகள்
பிறப்பு
சமயம்இந்து சமயம்
அறியப்படுதல்இந்திய மெய்யியலாளர்
Philosophyவாசஸ்பதி மிஸ்ரரின் பாமதி பற்றிய வருணனையான நூலான வேதாந்த கல்பதரு என்ற நூலின் ஆசிரியர்

  

அமலானந்தா (Amalananda) 1260 முதல் 1271 வரை ஆண்ட தேவகிரியின் யாதவ ஆட்சியாளரான மகாதேவரின் ஆட்சியின் போது வாழ்ந்த ஒரு தென்னிந்திய சமசுகிருத அறிஞர் ஆவார். அவரது வாழ்க்கை மற்றும் பின்னணி பற்றி அதிகம் தெரியவில்லை. அனுபவானந்தா அவரது ஆசானாக இருந்ததாக நம்பப்படுகிறது.

அமலானந்தா 1297 க்கு முன்பு வேதாந்த கல்பதரு என்ற நூலை எழுதினார். இந்த புத்தகம் வாசஸ்பதி மிஸ்ரரின் பாமதி பற்றிய வர்ணனையாகும், இது சங்கரரின் பதராயனின் பிரம்மசூத்திரங்களுக்கு விளக்கமாக உள்ளது. அவரது மற்ற படைப்புகள் - பிரம்ம சூத்திரங்களின் விளக்கங்களான சாஸ்திர-தர்ப்பணம், மற்றும் பத்மபாதாசார்யாரின் பஞ்சபாதிகாவின் விளக்கமான பஞ்சபாதிகா-தர்ப்பணம் . இந்த படைப்புகளின் மொழியின் தனித்துவம் மற்றும் சிந்தனை உள்ளடக்கம் தீவிரமானது.[1] பாமதியின் ஆசிரியரான வாசஸ்பதி மிசுரா 841 இல் வாழ்ந்தார். அப்பய்ய தீட்சிதா (1520-1593), காஞ்சியின் ரங்கராஜத்வரிந்திரரின் மகனும், ஒரு சிறந்த எழுத்தாளரும், அமலானந்தரின் வேதாந்த-கல்பதருவின் விளக்கமான கல்பதருபரிமாலை எழுதினார்.[2][3]

சுவேதாசுவதார உபநிடதத்தால் குறிப்பிடப்படும் யாத்ரேச்சவாதத்தை, தற்செயலான விளைவுகளின் கோட்பாடு என சங்கரர் விளக்குகிறார்; உறுதியான காரணங்களைப் பொறுத்து எந்த நேரத்திலும் விளைவுகள் உருவாகும் என்ற கோட்பாடாக அமலானந்தா விளக்குகிறார். அதே உபநிடதம் இயற்கையே (சுபாவம்) உலகத்திற்குக் காரணம் என்று குறிப்பிடுகிறது. சங்கரர் அதை வெவ்வேறு விடயங்களில் உள்ளார்ந்த இயற்கை சக்திகள் என்று விளக்குகிறார். அமலானந்தா இயற்கையை விளக்குகிறார், பொருள்கள் இருக்கும் வரையில் இருப்பது எ.கா சுவாசம், உடல் இருக்கும் வரை உயிருள்ள உடலின் இயல்பு உள்ளது.[4]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=அமலானந்தா&oldid=3913631" இலிருந்து மீள்விக்கப்பட்டது