அமர் பிரசாத் ரே

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அமர் பிரசாத் ரே
Amar Prasad Ray
பிறப்பு1913
இந்தியா
பணிமலேரியா, மருத்துவர்
விருதுகள்பத்மசிறீ
உலக சுகாதார அமைப்பு ஆளுமை விருது

அமர் பிரசாத் ரே (Amar Prasad Ray) ஓர் இந்திய மருத்துவர் மற்றும் மலேரிய நோயியல் நிபுணர் ஆவார்.[1] 1913 ஆம் ஆண்டு இவர் பிறந்தார். சமூக ஆரோக்கியம் மற்றும் இந்தியாவில் மலேரியா தொற்றுநோய் மேலாண்மை ஆகியவற்றில் நிபுணத்துவம் பெற்றவராகப் புகழ் பெற்றார்.[1] 1962 ஆம் ஆண்டில் இந்திய தேசிய அறிவியல் அகாடமியின் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினராக இருந்தார். 1974 ஆம் ஆண்டில் உலக சுகாதார அமைப்பும் இவருக்கு ஆளுமை விருதை வழங்கி சிறப்பித்துள்ளது.[2] 1967 ஆம் ஆண்டு இந்திய அரசாங்கமும் சமூகத்திற்கு இவர் செய்த பங்களிப்புகளுக்காக இந்தியாவில் வழங்கப்படும் நான்காவது மிக உயர்ந்த குடிமகன் விருதான பத்மசிறீ விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார்.[3] இவர் கல்யாணி ரே என்பவரை மணந்தார். இத்தம்பதியருக்கு ரவீந்திரநாத் ரே, எல்லா சென் மற்றும் உஷா மேத்தா ஆகிய மூன்று குழந்தைகள் பிறந்தனர்.

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 "Deceased fellow". Indian National Science Academy. 2015. Archived from the original on ஆகஸ்ட் 13, 2020. பார்க்கப்பட்ட நாள் May 8, 2015. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  2. "WHO Award". WHO. 2015. Archived from the original on July 8, 2004. பார்க்கப்பட்ட நாள் May 8, 2015.
  3. "Padma Shri" (PDF). Padma Shri. 2015. Archived from the original (PDF) on November 15, 2014. பார்க்கப்பட்ட நாள் November 11, 2014.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அமர்_பிரசாத்_ரே&oldid=3541239" இலிருந்து மீள்விக்கப்பட்டது