அப்துல் சலாம் (தலிபான் ஆளுனர்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

முல்லா அப்துல் சலாம் அகுந்த் (Mullah Abdul Salam Akhund) [1968 - 26 பிப்ரவரி 2017] தலிபான் அமைப்பின் மூத்த உறுப்பினராவார். இவர் ஆப்கானிஸ்தான் நாட்டின் குந்துஷ் மாகாணத்தின் தலிபானின் நிழல் ஆளுனராக இருந்தார்[1]. இவர் வடக்கு ஆப்கானிஸ்தான் பகுதிக்கான தலிபானின் மூத்த இராணுவ அதிகாரியாக இருந்தார்[2]. 2000 ஆம் ஆண்டு தலிபான் ஆட்சி நடந்தபோது ஆப்கானிஸ்தானில் கல்வி அமைச்சராகப் பணியாற்றினார். 2008 வரை ஆப்கானிஸ்தானின் ஜோவ்ஸியான் மாகாணத்தின் தலிபான் இராணுவ அதிகாரியாக இருந்தார். 2010 ஆம் ஆண்டு பாகிஸ்தான் நாட்டின் பைஸாலாபாத் நகரில் கைது செய்யப்பட்டு பின்னர் 2013 ஆம் ஆண்டில் விடுவிக்கப்பட்டார்[3][4]. ஆப்கானிய தேசியப் படையுடன் நடந்த மோதலில் 2016 ஆம் ஆண்டு அக்டோபரில் காயமடைந்தார். தானியங்கி விமானத் தாக்குதலில் இவர் 2017 பிப்ரவரி 27 அன்று அர்சி நகரில் கொல்லப்பட்டார். தலிபான் அமைப்பினர் இவரது மரணத்தை உறுதி செய்தனர்[1][5][6]. இவரது மரணத்தின் காரணமாகவே ஷாஹீன் முகாம் தாக்குதல் நடத்தப்பட்டது.

மேற்கோள்கள்[தொகு]