ஷாஹீன் முகாம் தாக்குதல் 2017

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஆப்கானிஸ்தானின் மசார் ஈ சரீப் நகரிலுள்ள ஷாஹீன் இராணுவ முகாம் மீது தாலிபான் தீவிரவாதிகள் 21 ஏப்ரல் 2017 அன்று துப்பாக்கிச்சூடு தாக்குதல் நடத்தியதில் 135 ஆப்கானிய தேசியப் படை இராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர்; மேலும் 65 பேர் காயமடைந்தனர்[1]. தாக்குதல்தாரிகள் இராணுவ சீருடை அணிந்து தொழுகையில் ஈடுபட்டிருந்த இராணுவ வீரர்கள் மீது தாக்குதல் நடத்தினர். மொத்தம் பத்து தாக்குதல்தாரிகள் இத்தாக்குதலில் ஈடுபட்டனர். தாக்குதல்தாரிகளுள் எழுவர் கொல்லப்பட்டனர், இருவர் தற்கொலை குண்டுதாரிகளாகி வெடித்துச் சிதறி இறந்தனர்; மேலும் ஒருவர் ஆப்கான் இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டார்[2]. உள்ளூர் நேரப்படி மதியம் 2 மணிக்கு தொடங்கிய தாக்குதல் பின்மாலைப் பொழுதில் நிறைவடைந்தது. இத்தாக்குதலுக்கு தலிபான் தீவிரவாதிகள் பொறுப்பேற்றுக்கொண்டனர்[3]. அப்துல் சலாம் கொல்லப்பட்டதன் எதிர்வினையாகவே இத்தாக்குதல் நடத்தப்பட்டது.

மேற்கோள்கள்[தொகு]

  1. "மசார் ஈ சரீப் இராணுவ முகாம் தாக்கப்பட்டது". Archived from the original on 2017-04-27. பார்க்கப்பட்ட நாள் 22 ஏப்ரல் 2017. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  2. "Over 50 feared or dead wounded in attack on Afghan corps in Balkh". பார்க்கப்பட்ட நாள் 22 ஏப்ரல் 2017. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  3. "More than 50 killed as Taliban target Afghan Army camp in Mazar-e-Sharif". பார்க்கப்பட்ட நாள் 22 ஏப்ரல் 2017. {{cite web}}: Check date values in: |accessdate= (help)