அப்துல்லாதீப் அல் மஹ்மூத்
Appearance
அப்துல்லாதீப் அல் மஹ்மூத் | |
---|---|
பிறப்பு | 1946 அல் ஹித்], பஹ்ரைன் |
தேசியம் | பஹ்ரைன் |
பணி | தேசிய ஒற்றுமையின் ஒன்றுகூடலின் தலைவர் |
அப்துல்லாதீப் அல் மஹ்மூத் (Abdullatif Al-Mahmood) ஓர் பஹ்ரைன் அரசியல்வாதி மற்றும் மருத்துவர். இவர் சன்னி அரபு வம்சாவளியைச் சேர்ந்தவர்.
செயல்பாடுகள்
[தொகு]1992 ஆம் ஆண்டில், இவர் எழுச்சி மனுவில் கையெழுத்திட்டார் [1] இது இரண்டு வாரங்கள் தடுத்து வைக்கப்பட்டிருந்த பஹ்ரைன் நாடாளுமன்ற துணைத் தலைவரான இவரை விடுவிக்க கோரும் உடன்படிக்கையாகும். [2] இவர் விடுவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, மனு வேறு இலக்குகளை எடுத்துள்ளது என்று வாதிடுவதிலிருந்து இவர் விலகினார். பின்னர் இவர் அரசியல்செயல்பாட்டில் இருந்து விலகி பஹ்ரைன் பல்கலைக்கழகத்தில் மருத்துவராக பணியாற்றினார்.
அரசியலுக்குத் திரும்புதல்
[தொகு]2011 ஆம் ஆண்டில் தொடங்கிய பஹ்ரைன் போராட்டங்களின் போது, இவர் அரசாங்க சார்புடைய தேசிய ஒற்றுமையைத் திரட்டிய தலைவராகத் தோன்றினார். இவர் ஃபதே மசூதி சட்டசபைக்கு தலைமை தாங்கினார். மேலும் சன்னிகளின் கோரிக்கைகளை ஒருங்கிணைத்தார்.
மேலும் காண்க
[தொகு]- அல் ஃபதே கிராண்ட் மசூதி
- அத்னான் அல் கட்டான்
குறிப்புகள்
[தொகு]- ↑ Book of the time: Gates of Bahrain... reading stage، page 15.
- ↑ Ali Rabia tells the nineties (1) பரணிடப்பட்டது 2011-07-07 at the வந்தவழி இயந்திரம் -Newspaper الوقت.