உள்ளடக்கத்துக்குச் செல்

அப்டெரஸ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கிரேக்கத் தொன்மங்களில் குறிக்கப்படும் அப்டெரஸ் (Abderus அல்லது Abderos ( பண்டைய கிரேக்கம் : Ἄβδηρος) என்பவர் தெய்வீக வீரர்களில் ஒருவர் ஆவார். இவர் ஹெராக்ளிசின் 'உற்ற தோழராக இருந்து புகழ்பெற்றவர். மேலும் சில குறிப்புகளின்படி இவர் எர்ம்எசின் மகன் எனப்படுகிறார். [1]

குடும்பம்[தொகு]

அப்டெரஸின் தந்தைவழிகுறித்த குறிப்புகள் வேறுபடுகின்றன. இவர் ஹெர்ம்ஸ் கடவுளின் மகன் என்றும் லோக்ரிஸில் ஓபசை பூர்வீகமாகக் கொண்டவர் என்று சிலர் கூறுகிறார்கள். [2] ஆனால், பிற எழுத்தாளர்களின் கூற்றின் படி, இவர் திரோமியஸ் தி லோக்ரியனின் மகன் எனப்படுகிறது. [3] இவர் பேட்ரோக்ளஸின் சகோதரர் என்று போட்டியஸ் எழுதுகிறார். [4] பிந்தர் அப்டெரஸை பொசைடன் மற்றும் த்ரோனியாவின் எனக்குறிப்பிடுகின்றனர் . [5]

தொன்மம்[தொகு]

ஹெராக்ஸின் எட்டாவது பணியின்போது ஒரு துன்பியல் பாத்திரத்திற்காக அப்டெரஸ் பெரும்பாலும் அறியப்படுகிறார். மற்றவர்களுடன் சேர்ந்து, திரேசியன் பிஸ்டோன்களின் அரசரான தியோமெடிஸின் நான்கு கொடிய குதிரைகளைப் பிடிக்க ஹெராக்கிள்சுக்கு உதவினார். ஹெராக்ளிசின் அக்குதிரைகளை பிடித்துவந்து தான் வரும்வரை அப்டெரசை பார்த்துக்கொள்ளுமாறு விட்டுச் சென்றார். ஹெராக்கிள்ஸ் அருகில் இல்லாத நிலையில் அக்கொடிய குதிரைகள் அப்டெரஸை உண்டுவிட்டன. [6] இதற்கு பழிவாங்கும் விதமாக, ஹெராக்கிள்ஸ் அக் குதிரைகளுக்கு அதன் உரிமையாளரான மன்னன் தியோமெடிசை உயிரோடு உணவாக்கினார். ஹெரக்கிள்ஸ் அப்டெராஸ் கல்லறைக்கு அருகில் அப்டெரா நகரத்தை நிறுவினார். அங்கு இவருக்கு மரியாதை செய்ய்யும் நிமித்தமாக அகோன்கள் (கிரேக்கம்: ἀγῶνες) குத்துச்சண்டை, கைக்கலப்பு, மற்போர் ஆகியவற்றைக் கொண்ட தடகள விளையாட்டுக்கள் அவரது நினைவாக நடத்தப்பட்டன.

குறிப்புகள்[தொகு]

  1. Schmitz, Leonhard (1867), "Abderus", in Smith, William (ed.), Dictionary of Greek and Roman Biography and Mythology, vol. 1, p. 2, archived from the original on 2005-07-28, பார்க்கப்பட்ட நாள் 2020-12-01
  2. Pseudo-Apollodorus, Bibliotheca 2.5.8
  3. Strabo, Geographica 7.8.43 p. 331 & 7.8.46
  4. Photius, Bibliotheca excerpts, §190.39
  5. Pindar, Paean 2.1
  6. Philostratus of Lemnos, Eikones 2.25
"https://ta.wikipedia.org/w/index.php?title=அப்டெரஸ்&oldid=3353247" இலிருந்து மீள்விக்கப்பட்டது