அபுரைட்டு
தோற்றம்
| அபுரைட்டு Abhurite | |
|---|---|
அபுரைட்டின் பழுப்புநிற தட்டையான படிகங்கள், நார்வேயின் தெற்கு கடற்கரையோரம் தரைதட்டிய ஐதராவில் இருந்து கிடைத்தது | |
| பொதுவானாவை | |
| வகை | ஆலைடு கனிமம் |
| வேதி வாய்பாடு | Sn21O6(OH)14Cl16 |
| இனங்காணல் | |
| நிறம் | நிறமற்றது/வெளிர் மஞ்சள் -பச்சை |
| படிக இயல்பு | தகடு, மெல்லிய படிகங்கள் |
| படிக அமைப்பு | முக்கோணம் |
| இரட்டைப் படிகமுறல் | 0001 இல் |
| பிளப்பு | இல்லை |
| முறிவு | கரடுமுரடு |
| விகுவுத் தன்மை | உடையும் |
| மோவின் அளவுகோல் வலிமை | 2 |
| கீற்றுவண்ணம் | வெண்மை |
| ஒளிஊடுருவும் தன்மை | ஒளிபுகும் |
| ஒப்படர்த்தி | 4.42 |
| அடர்த்தி | 4.42 கி/செமீ3 (அளவிடப்பட்டது) 4.417 கி/செ.மீ3 (Calculated) |
| ஒளியியல் பண்புகள் | ஒற்றை அச்சு (+) |
| ஒளிவிலகல் எண் | nω = 2.060 nε = 2.110 |
| இரட்டை ஒளிவிலகல் | δ = 0.050 |
| பிற சிறப்பியல்புகள் | ஒளிபுகாது |
| மேற்கோள்கள் | [1][2][3] |
அபுரைட்டு (Abhurite) என்பது Sn3O(OH)2Cl2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட வெள்ளீயம், ஆக்சிசன், ஐதரசன், குளோரின் ஆகிய தனிமங்களின் கனிமம் ஆகும்.[4] Sn21O6(OH)14Cl16 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடாலும் இதை அடையாளப்படுத்தலாம். [3][1] செங்கடல் கடற்கரையோரம் உள்ள ஜித்தா நகருக்கு அருகிலுள்ள சிறுகுடாவான சாரம் அபூரில் தரைதட்டிய கப்பலோரத்தில் வெள்ளீய பாளம் கண்டறியப்பட்டதால் இக்கனிமத்திற்கு அபுரைட்டு எனப்பெயரிடப்பட்டது. தனிமங்களின் கடினத்தன்மையை அளக்க உதவும் மோவின் அளவுகோலில் அபுரைட்டின் கடின எண் 2 ஆகும். அபுரைட்டு வெளிர் பச்சை/மஞ்சள் முதல் அடர் பழுப்பு/பச்சை வரை நிறத்தில் மாறுபடும்.[5]
பன்னாட்டு கனிமவியல் சங்கம் அபுரைட்டு கனிமத்தை Abh[6] என்ற குறியீட்டால் அடையாளப்படுத்துகிறது.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 Mindat.org – Abhurite
- ↑ Webmineral.org – Abhurite
- ↑ 3.0 3.1 "Handbook of Mineralogy – Abhurite" (PDF). Archived from the original (PDF) on 2015-09-24. Retrieved 2013-01-26.
- ↑ Richard V. Gaines, H. Catherine W. Skinner, Eugene E. Foord, Brian Mason, and Abraham Rosenzweig: "Dana's new mineralogy", p. 401. John Wiley & Sons, 1997
- ↑ https://www.mindat.org/photoscroll.php?frm_id=pscroll&cform_is_valid=1&searchbox=Abhurite&submit_pscroll=Search
- ↑ Warr, L.N. (2021). "IMA–CNMNC approved mineral symbols". Mineralogical Magazine 85 (3): 291–320. doi:10.1180/mgm.2021.43. Bibcode: 2021MinM...85..291W.
