அபர்ணா ஜெயின்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அபர்ணா ஜெயின்
பிறப்பு8 பெப்ரவரி 1970 (1970-02-08) (அகவை 54)
புதுதில்லி, இந்தியா
தேசியம்இந்தியன்
பணிஎழுத்தாளர், தலைமைப் பயிற்சியாளர்
உறவினர்கள்அர்ஜூன் ஜெயின் (சகோதரர்)

அபர்ணா ஜெயின் (Aparna Jain) ஒரு எழுத்தாளர் மற்றும் நிர்வாக தலைமைப் பயிற்சியாளர் ஆவார். இவர் தி சூட் ஃபேமிலி குக்புக் மற்றும் ஓன் இட்: லீடர்சிப் லெசன்ஸ் ஃபிரம் விமன் ஹூ டூ. ஆகிய இரண்டு புத்தகங்களை எழுதியுள்ளார் . இந்த நூலானது ஆண்டின் சிறந்த வணிக நூலிற்கான டாடா லிட் லிவ் விருது பெற்றது. [1]

பணியிடத்தில் பெண்களுக்கு சம உரிமைகளை வழங்குவதற்காகக் குரல் கொடுத்து வருகிறார். [2] [3] [4] [5] ஜெயின் ஜீப்ரா ஒர்க்ஸ் எனும் சொந்த ஆலோசனை நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார். [6]

ஆரம்பகால வாழ்க்கை மற்றும் கல்வி[தொகு]

ஜெயின் புதுதில்லியில் பிறந்தார். கர்நாடகாவில் பெங்களூரில் வளர்ந்தார். பெங்களூரில் உள்ள சோபியா உயர்நிலைப்பள்ளி , ஆந்திராவின் மதனப்பள்ளி, இரிஷி பள்ளத்தாக்கு பள்ளி உள்ளிட்ட பல்வேறு பள்ளிகளில் பயின்றார். பின்னர் சுவிட்சர்லாந்திற்கு குடிபெயர்ந்தார், அங்கு அல்பினா ஸ்கூல் ஆஃப் ஹோட்டல் மேனேஜ்மென்ட்டில் படித்தார்.

புத்தகங்கள்[தொகு]

ஜெயினின் முதல் புத்தகம் அவரது குடும்பத்தின் பாரம்பரிய சமையல் குறிப்புகளான சூட் ஃபேமிலி குக்புக் ஆகும். இது 2013 ஆம் ஆண்டில் ஹார்பர்காலின்ஸ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது. [7]

விருதுகள்[தொகு]

2015-16

  • பாலின உணர்திறனுக்கான தெற்காசியா லாட்லி மீடியா விருதுகள் 2015-16 [8]

சான்றுகள்[தொகு]

  1. http://www.tata.com/article/inside/tata-literature-live-book-awards-2016
  2. http://www.hindustantimes.com/art-and-culture/words-that-capture-the-dreams-and-thoughts-of-women/story-eNOEJRlqAO3GbugaGU6hQP.html
  3. http://timesofindia.indiatimes.com/home/sunday-times/all-that-matters/Backing-Pachauri-is-like-saying-womens-safety-doesnt-matter-Aparna-Jain/articleshow/50978330.cms
  4. http://www.huffingtonpost.in/bloggers/aparna-jain/
  5. http://www.firstpost.com/living/pachaurihatao-for-everyone-who-asks-why-women-delay-harassment-complaints-remember-the-teri-case-2619448.html
  6. http://economictimes.indiatimes.com/jobs/a-look-into-what-can-be-done-to-bridge-india-incs-gender-gap/articleshow/57225312.cms
  7. http://www.livemint.com/Leisure/3IXYhspfIwBpJngrK2vxXN/All-in-the-family.html
  8. "Laadli Media Awards honours media campaigns for excellence in gender portrayal". பார்க்கப்பட்ட நாள் 21 Jun 2017.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அபர்ணா_ஜெயின்&oldid=3122697" இலிருந்து மீள்விக்கப்பட்டது