தண்டத்தொகை
தண்டத்தொகை (fine) என்பது ஒரு நீதிமன்றம் [1] அல்லது பிற அதிகாரம் பொருந்திய அமைப்பினால் ஒரு குற்றத்திற்கான தண்டனையாக செலுத்தப்பட வேண்டும் என்று முடிவு செய்யும் பணத்தினைக் குறிப்பதாகும். [2] [3] [4][5] அபராதத்தின் அளவு ஒவ்வொரு வழக்கிலும் அதன் தன்மையினைப் பொறுத்து தீர்மானிக்கப்படலாம், ஆனால் அது பெரும்பாலும் முன்கூட்டியே அறிவிக்கப்படுகிறது. [6]
குற்றங்கள், குறிப்பாக சிறு குற்றங்கள், அல்லது ஒரு உரிமைகோரலின் தீர்வு போன்றவற்றிற்கான நிதித் தண்டனைகளுக்கு இந்த வார்த்தை பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது.
நாடு வாரியாக அபராதம்
[தொகு]இங்கிலாந்து மற்றும் வேல்சு
[தொகு]குற்றவியல் நீதிமன்றச் சட்டம் 1980 இல், அபராதம் என்ற சொற்றொடர் எந்தவொரு தண்டனையின் கீழ் செலுத்த வேண்டிய எந்தவொரு பண அபராதம் அல்லது பண இழப்பீடு அல்லது பணப் பறிப்பு ஆகியவற்றை உள்ளடக்குகிறது.[7]
குற்றவியல் நீதிமன்றச் சட்டத்தின் 32வது பிரிவில், "அபராதம்" என்ற வெளிப்பாடு பண அபராதத்தை உள்ளடக்கியது, ஆனால் பணப் பறிப்பு அல்லது பண இழப்பீட்டினை உள்ளடக்கவில்லை. [8]
நெதர்லாந்து
[தொகு]குற்றவியல் சட்டம்
[தொகு]டச்சு குற்றவியல் பிரிவானது (டச்சு: Wetboek van Strafrecht (WvSr)) சட்டத்தின் ஒவ்வொரு விதி மீறலுக்கும் அபராதத்திற்கான குறிப்பிட்ட தொகைகள் வசூலிக்கப்படுவது இல்லை. மாறாக கீழ்கானும் வகைகளில் அபராதம் வசூலிக்கப்படுகிறது.
வகை | அபராதத்தின் உச்சவரம்பு (ஐரோப்பிய நெதர்லாந்து)[9] |
அபராதத்தின் அதிகபட்ச உயரம் (கரீபியன் நெதர்லாந்து) |
---|---|---|
முதலில் | €410 | $280 |
இரண்டாவது | €4,100 | $2,800 |
மூன்றாவது | €8,200 | $5,600 |
நான்காவது | €20,500 | $14,000 |
ஐந்தாவது | €82,000 | $56,000 |
ஆறாவது | €820,000 | $560,000 |
சான்றுகள்
[தொகு]- ↑ Amato, Albert (2010). "Reference Guide to Reinsurance 2010 Edition". Business Insurance: 219.
- ↑ Epstein, Isidore (1936). "The Babylonian Talmud ...: Seder Nashim. 4 v. 1936". The Babylonian Talmud (Soncino Press) 4: 191.
- ↑ "American Jobs Creation Act of 2004". Conference Report to Accompany H.R. 4520 (U.S. Government Printing Office): 675. 2004.
- ↑ Willison, David (1819). The Edinburgh Review: 446.
- ↑ Wolf, Samuel Marione; McLure, J. C.; Lewis, William Wallace; Barksdale, C. D.; Wetmore, Silas MacBee (1922). Code of Laws of South Carolina, 1922. Vol. 3. p. 256.
- ↑ Bray, Samuel (2012). "Announcing Remedies". Cornell Law Review 97.
- ↑ The Magistrates' Courts Act 1980, section 150(1)
- ↑ The Magistrates' Courts Act 1980, section 32(9)
- ↑ Justitie, Ministerie van Veiligheid en (2015-11-20). "Besluit van 10 november 2015 tot wijziging van de bedragen van de categorieën, bedoeld in artikel 23, vierde lid, van het Wetboek van Strafrecht". zoek.officielebekendmakingen.nl.