அபதை சயின் கான்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

அபதை சயின் கான்[1] என்பவர் ஒரு கால்கா மங்கோலிய இளவரசர் ஆவார். 1587 ஆம் ஆண்டு துசீது கானகத்தின் முதல் கானாக மூன்றாவது தலாய் லாமாவால் அழைக்கப்பட்டார்.[2] இவர் திபெத்திய புத்த மதத்தை கால்கா மங்கோலியர்களிடம் பரப்பினர். 1585ஆம் ஆண்டு எர்தீன் ஜூ என்ற இடத்தில் புத்த மடாலயத்தை நிறுவினர்.

இவர் 1554ஆம் ஆண்டு கால்கா மங்கோலிய இளவரசரான ஒனோகுயி உயிசென் நோயனின் மகனாக பிறந்தார். இவர் இவரது தந்தைக்கு பிறந்த ஐந்து மகன்களில் மூத்தவராக பிறந்தார்.[3] இவரது தந்தை படு மோங்கே தயன் கானின் பேரன் ஆவார். இவரது தாத்தா கெர்சென்ஜி ஆவார். இவர் பிறக்கும்போது இவரது விரல்களில் ரத்தம் ஒட்டியிருந்தது. இது மாபெரும் போர் வீரனாக இவர் வருவார் என்பதன் அடையாளமாக கருதப்பட்டது.[4] 1567-1580 காலத்தில் அபுதை மேற்கு ஒயிரட் மங்கோலிய பழங்குடியினருக்கு எதிராக பல படையெடுப்புகளை நடத்தினார். இறுதியாக ஒயிரட்களின் கோஷுட் பழங்குடியினத்தை 1580களின் மத்தியில் கோப்கோர் கேரியே என்ற இடத்தில் தோற்கடித்தார். பிறகு தன் மகன் சுபுதையை ஒயிரட் அரியணையில் அமர்த்தினார்.[5] போர்க் களத்தில் ஆக்ரோஷமாக சண்டையிடுவதன் காரணமாக இவருக்கு மூர்க்கமான கதாநாயகன் அல்லது வடக்கு கால்காவின் மூர்க்கமான தைஜி என்ற பெயர் ஏற்பட்டது.[6]

உசாத்துணை[தொகு]

  1. Ferdinand Lessing, "Mongolian-English Dictionary", p.5
  2. Sanders, Alan A. K. (2010). Historical Dictionary of Mongolia. Scarecrow Press. பக். 36. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0810874527. 
  3. Howorth, Henry (1876). History of the Mongols from the 9th to the 19th Century. National Central Library of Florence: Longmans, Green. பக். 483. 
  4. Atwood, Christopher (2004). Encyclopedia of Mongolia and the Mongol Empire. University of Indiana. பக். 1. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0-8160-4671-9. https://archive.org/details/encyclopediaofmo0000atwo/page/1. 
  5. Atwood, Christopher (2004). Encyclopedia of Mongolia and the Mongol Empire. University of Indiana. பக். 1. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0-8160-4671-9. https://archive.org/details/encyclopediaofmo0000atwo/page/1. 
  6. Bawden, C. R. (2013). Mongolian Literature Anthology. Routledge. பக். 89. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-1136602627. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=அபதை_சயின்_கான்&oldid=3357599" இருந்து மீள்விக்கப்பட்டது