அன்வர் இப்ராகிம் பாற்புணர்ச்சி வழக்குகள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(அன்வர் இப்ராகிம் பாற்புணர்ச்சி வழக்கு இலிருந்து வழிமாற்றப்பட்டது)

அன்வார் இப்ராகிம் பாற்புணர்ச்சி வழக்கு மலேசியாவில் அரசியல் சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ள ஒரு வழக்காகும்.

1998 அன்வார் பாற்புணர்ச்சி வழக்கு[தொகு]

மலேசியாவின் முன்னாள் துணைப் பிரதமர் அன்வர் இப்ராகிம் மீது முதன் முதலில் 1998 ல் இவ்வழக்கு தொடுக்கப்பட்டது. அவ்வழக்கில் அவருக்கு ஒன்பது ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. பின் 2004ல் இவ்வழக்கிலிருந்து விடுதலையானார்.

2008 அன்வார் பாற்புணர்ச்சி வழக்கு[தொகு]

ஜூன் 29, 2008ல் இவருடைய உதவியாளர் முகம்மது செய்புல் புகாரி அசலன் என்பவர் தன்னை ஓரினச்சேர்க்கையில் ஈடுபடுத்தியதாக கூறி வழக்கு நடைபெறுகிறது. இந்த வழக்கு அரசியற் காரணங்களால், பிரதமர் மற்றும்அவரது மனைவியின் தூண்டுதலில் பேரில் புனையப்பட்டுள்ளது என்று எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் சிவராசா ராசையா கூறிவருகிறார். எனினும் இதனைக் காவல்துறை மறுத்துள்ளது. தக்க ஆதாரங்களுடனேயே இக்குற்றம் சாட்டப்பட்டுள்ளதாகக் காவல்துறை தெரிவித்துள்ளது.[1][2] இவ்வழக்கின் தீர்ப்பு சனவரி 9, 2012 அன்று வெளியிடப்பட்டது. அதில் அவருக்கு எதிரான ஆதாரங்கள் போதுமானதாக இல்லையென்றும், அவருக்கு எதிரான டிஎன்ஏ சான்று நம்பக்கூடியதாக இல்லை என்று கூறி விடுதலை செய்து நீதிபதி தீர்ப்பளித்தார்.

2014 அன்வார் பாற்புணர்ச்சி வழக்கு[தொகு]

2008 ஓரினச்சேர்க்கை வழக்கில் விடுதலை பெற்றிருந்தாலும் தற்பொழுது இவருடைய உதவியாளர் முகம்மது செய்புல் புகாரி அசலன் என்பவர் அன்வார் தன்னை ஓரினச்சேர்க்கையில் ஈடுபடுத்தியதாகக் கூறினார். இவ்வழக்கு தற்போது உச்ச நீதிமன்றதில் வழக்கு நடைபெற்றது.[3] அன்வார் குற்றவாளி என்று தீர்ப்பளிக்கப்பட்டது. அதனை எதிர்த்து தொடரப்பபட்ட மேல் முறையீட்டிலும் குற்றம் நிரூபிக்கப்பட்டு ஐந்தாண்டுகள் தண்டனை உறுதி செய்யப்பட்டது. சுங்கை புளு சிறைச்சாலையில் அடைக்கப்பட்டார்.


மேற்கோள்கள்[தொகு]

  1. "Anwar’s Sodomy Charge Complicates Political Struggle". Asian Sentinel. 2008-08-07. Archived from the original on 2010-01-16. https://web.archive.org/web/20100116045312/http://asiasentinel.com/index.php?option=com_content&task=view&id=1374&Itemid=178. பார்த்த நாள்: 2010-02-10. 
  2. "afp.google.com,Malaysian opposition leader Anwar charged with sodomy". 2008-08-10 அன்று மூலதளத்திலிருந்து பரணிடப்பட்டது எடுக்கப்பட்டது. 2008-08-10 அன்று பார்க்கப்பட்டது.
  3. "Malaysia: Anwar Ibrahim sodomy acquittal overturned". BBC News. 7 March 2014. http://www.bbc.co.uk/news/world-asia-26479642. பார்த்த நாள்: 7 March 2014.