அன்யின் மொழி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அன்யின் மொழி
புவியியல்
பரம்பல்:
ஐவரி கோஸ்ட் , கானா
வகைப்பாடு: நைகர்-கொங்கோ
 அட்லாண்டிக்-கொங்கோ
  வோல்ட்டா-கொங்கோ
   க்வா
    நையோ
     போடௌ-டனோ
      மத்திய
       பிய
        வட
         அன்யின் மொழி
துணைப்பிரிவுகள்:


அன்யின் மொழி (Anyin language), முதன்மையாக ஐவரி கோஸ்ட் நாட்டில் பேசப்படுகிறது. கானாவிலும் இம் மொழி பேசுவோர் உள்ளனர். இது நைகர்-கொங்கோ மொழிக் குடும்பத்தின் க்வா பிரிவைச் சேர்ந்தது.

இம் மொழியின் கிளை மொழிகள், சன்வி (Sanvi), இண்டெனீ (Indenie), பினி (Bini), பொனா (Bona), மொரோனு (Moronou), ஜுவாப்லின் (Djuablin), அனோ (Ano), அபே (Abe), பராபோ (Barabo), அலங்குவா (Alangua) என்பனவாகும். ஐவரி கோஸ்ட்டில் அன்யின் மொழியைத் தாய் மொழியாகக் கொண்ட 6 இலட்சத்துப் பத்தாயிரம் பேர்வரை இருக்கிறார்கள். இவர்களுடன் இம்மொழியை இரண்டாம் மொழியாகப் பயன்படுத்துபவர்கள் 10,000 முதல் 100,000 வரை இருக்கலாம் எனக் கருதப்படுகின்றது. இத்துடன் இம்மொழி பேசுபவர்கள் கானாவில் இரண்டு இலட்சம் வரை இருக்கிறார்கள்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=அன்யின்_மொழி&oldid=1348222" இலிருந்து மீள்விக்கப்பட்டது