அன்னே காச்சிர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அன்னே காச்சிர்
Anne Kajir
பிறப்பு1974
தேசியம்பப்புவா நியூ கினி
பணிவழக்கறிஞர்
அறியப்படுவதுசுற்றுச்சூழலியலாளர்
விருதுகள்கோல்டுமேன் சுற்றுச்சூழல் விருது (2006)

அன்னே காச்சிர் (Anne Kajir) பப்புவா நியூ கினியா நாட்டைச் சேர்ந்த ஒரு வழக்கறிஞராவார். இவர் 1974 ஆம் ஆண்டு பிறந்தார். வெப்பமண்டல காடுகளில் சட்டவிரோதமாக உள்நுழைய அனுமதித்தது தொடர்பாக பப்புவா நியூ கினியா அரசாங்கத்தில் பரவலாக ஊழல் நடந்ததற்கான ஆதாரங்களை இவர் கண்டுபிடித்தார்.

போர்ட் மோரெசுபியில் இருக்கும் சுற்றுச்சூழல் சட்ட மையத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக கச்சீர் பணியாற்றியுள்ளார். வெளிநாட்டு நிறுவனங்களின் பெரிய அளவிலான, சட்டவிரோத காடழிப்பு நடைமுறைகளைத் தடுக்கும் நோக்கில் உச்சநீதிமன்ற வழக்கில் தலைமை வழக்கறிஞராக இருந்தார்.

1980 ஆம் ஆண்டுகளில் தொழில்துறை ஆதிக்கம் என்பது பப்புவா நியூ கினியாவின் வெப்பமண்டல காடுகளை கடுமையாக குறைத்து சேதப்படுத்தியது. உள்ளூர் நில உரிமையாளர்களுக்கு தீங்கு விளைவிக்கும் அச்சுறுத்தல்களை எதிர்த்து இவர் மேற்கொண்ட முன்னெடுப்புகளுக்காக கோல்டுமேன் சுற்றுச்சூழல் விருது 2006 ஆம் ஆண்டு வழங்கப்பட்டது. [1]

மேற்கோள்கள்[தொகு]

  1. Goldman Environmental Prize 2006: Anne Kajir பரணிடப்பட்டது அக்டோபர் 20, 2007 at the வந்தவழி இயந்திரம் (Retrieved on 2007-10-25)
"https://ta.wikipedia.org/w/index.php?title=அன்னே_காச்சிர்&oldid=3197055" இலிருந்து மீள்விக்கப்பட்டது