அன்னி
Appearance
இக்காலத்து அன்னியூர் என்னுமிடத்தில் இருந்துகொண்டு சங்ககாலத்தில் ஆண்ட மன்னன் அன்னி. இது நாகப்பட்டினம் மாவட்டத்தில் மயிலாடுதுறை வட்டத்தில் அமைந்துள்ளது.
அன்னியின் காவல்மரமான புன்னை மரத்தை குறுக்கைப் பறந்தலைப் போரில் வென்ற திதியன் வெட்டிச் சாய்தபோது போர் வெற்றியை யாழ் மீட்டிப் பாடும் வயிரியர் ஆரவாரம் செய்தனர்.[1]
எவ்வி அரசன் நன்மொழி கூறி அடக்கிவைத்ததைப் பொருட்படுத்தாமல் திதியனோடு போரிட்டு அன்னி மாண்டான்.[2] [3]
அன்னி பெரியவன்தான். என்றாலும் இருபெரு வேந்தர் அவனினும் பெரியர். அதனால் போரில் வென்ற இருபெரு வேந்தர் அன்னியின் புன்னைமரத்தை வெட்டிச் சாய்த்துவிட்டனர். [4]
இருபெரு வேந்தர் என்று இங்குக் குறிப்பிடப்படுபவர்கள் சோழனும் பாண்டியனும் ஆவர்.