அன்ட்ரோனோவோ பண்பாடு
அன்ட்ரோனோவோ பண்பாடு | |
---|---|
![]() | |
புவியியல் பகுதி | யுரேசியப் புல்வெளி |
காலப்பகுதி | பிந்தைய வெண்கலக் காலம் |
காலம் | அண். 2000 – 1150 பொ. ஊ. மு. |
முந்தியது | திண் கயிறு மட்பாண்டப் பண்பாடு, சிந்தசுதா பண்பாடு, ஒகுனேவ் பண்பாடு |
பிந்தியது | கரசுக் பண்பாடு |

அன்ட்ரோனோவோ பண்பாடு என்பது, மேற்கு சைபீரியாவிலும், யுரேசியப் புல்வெளி பகுதிகளிலும், கி.மு 2300-1000 ஆண்டு காலப்பகுதிகளில் நிலவிய ஒரேவிதமான பல வெண்கலக் காலப் பண்பாடுகளை ஒருமித்துக் குறிக்கும். 1914 ஆம் ஆண்டில், அழகூட்டப்பட்ட மட்கலங்களோடு, குந்தி இருந்த நிலையில் காணப்பட்ட எலும்புக் கூடுகளோடு கூடிய புதை குழிகள் அண்ட்ரோனோவோ என்னும் ஊரில் கண்டுபிடிக்கப்பட்டன. இந்த ஊரின் பெயரைத் தழுவியே அன்ட்ரோனோவோ பண்பாடு என்ற பெயர் ஏற்பட்டது.[1][2][3] இதன் பின்னர் இப் பாண்பாடு தெற்கிலும், கிழக்கிலும் பரவிய காலப்பகுதியைச் சேர்ந்த, குறைந்தது நான்கு துணைப் பண்பாடுகளாவது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளன. அவை:
- சிந்தாஷ்தா-பெட்ரோவ்கா-ஆர்க்கைம் (தெற்கு உரால், வடக்கு கசாக்ஸ்தான், கிமு 2200-1600)
- செல்யாபின்சுக் மாகாணத்தில் உள்ள சிந்தாஷ்தா (Sintashta) அரண்கள் கிமு 1800.
- அண்மையில் உள்ள கி.மு 17 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த ஆர்க்கைம் (Arkaim) குடியிருப்பு.
- அலகுல் (கிமு 2100-1400) ஆக்சஸ் மற்றும் ஜாக்ஸர்ட்டெஸ் (Jaxartes) என்னுமிடங்களுக்கு இடையில், கிசில்கும் பாலைவனம்
- அலெக்சேயெவ்கா (கி.மு 1300-1100 வெங்கலக்கால இறுதி) கிழக்குக் கசாக்ஸ்தானில், துர்க்மேனியாவிலுள்ள நாமாஸ்கா 6 உடன் தொடர்பு.
- ஃபெடோரோவோ (கிமு 1500-1300) தெற்கு சைபீரியாவில் (எரியூட்டல், தீ வழிபாடு என்பன தொடர்பான மிகப் பழைய சான்று)
- பெஸ்ஹ்கெண்ட்-வாக்ஷ் (கிமு 1000-800)
இப் பண்பாட்டின் புவியியல் பரப்பு மிகவும் பெரியது என்பதுடன் இதன் எல்லைகளை அச்சொட்டாக வரையறுப்பதும் கடினமானது. இதன் மேற்கு எல்லைப் பகுதியில் இது ஏறத்தாழ அதே காலத்தைச் சேர்ந்த ஆனால் வேறுபட்ட ஸ்ரூப்னா பண்பாட்டுடன் கலந்துள்ளது. கிழக்கில், மினுசிங்க்ஸ் தாழ்நிலப் பகுதிவரை சென்று அங்கே முந்திய ஆஃபானாசேவோ பண்பாட்டுடன் கலக்கிறது. மேலதிக இடங்கள் தெற்கே, கோப்பெட் டாக் (துர்க்மெனிஸ்தான்), பாமிர் (தாஜிக்ஸ்தான்), தியான் ஷான் (கிர்கிஸ்தான்) ஆகிய இடங்கள் வரை பரவியுள்ளன.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Andronovo Culture
- ↑ "An Overview of the Andronovo Culture". Archived from the original on 2019-02-28. Retrieved 2018-04-11.
- ↑ "Steppe Andronovo culture". Archived from the original on 2018-03-16. Retrieved 2018-04-11.