அனைத்துலக உருளைக்கிழங்கு ஆண்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

2008 ஆம் ஆண்டை அனைத்துலக உருளைக்கிழங்கு ஆண்டு என ஐக்கிய நாடுகள் அவை அறிவித்தது. இதற்கான தீர்மானம் (60/191) 2005 ஆம் ஆண்டு டிசம்பர் 22 ஆம் தேதி ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் 68 ஆவது முழுநிறைக் கூட்டத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்டது. முன்னர் உணவு வேளாண்மை அமைப்பினால் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் ஒன்றை அடியொற்றியே பொதுச்சபை இத் தீர்மானத்தை நிறைவேற்றியது.

நாடுகளின் அரசுகள், ஐக்கிய நாடுகள் வளர்ச்சித் திட்டம், அனைத்துலக வேளாண்மை ஆய்வு தொடர்பான ஆலோசனைக் குழு, ஐக்கிய நாடுகள் அவை சார்ந்த பிற அமைப்புக்கள், அரசு சார்பற்ற அமைப்புக்கள் ஆகியவற்றுடன் சேர்ந்து அனைத்துலக உருளைக்கிழங்கு ஆண்டுச் செயற்பாடுகளை முன்னெடுக்க உதவுமாறு உணவு வேளாண்மை அமைப்பை இத் தீர்மானம் கேட்டுக்கொண்டது.

பின்னணி[தொகு]

உருளைக்கிழங்கு உலக மக்களின் முதன்மையான உணவுகளில் ஒன்று. உணவுப் பாதுகாப்பு, வறுமை ஒழிப்பு என்பவை தொடர்பில் உருளைக்கிழங்கு ஆற்றக்கூடிய பங்கு முக்கியமானது.[1]. உலக அளவில் ஏற்றுக்கொள்ளப்பட்ட வளர்ச்சி இலக்குகளை அடைவதற்கு இது மிகவும் இன்றியமையாதது. 2005 ஆம் ஆண்டில் நடைபெற்ற உணவு வேளாண்மை அமைப்பின் மாநாட்டில், அனைத்துலக உருளைக்கிழங்கு ஆண்டு ஒன்றை அறிவிக்கும்படி, ஐக்கிய நாடுகள் அவையைக் கேட்டுக்கொள்ளும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

குறிப்புக்கள்[தொகு]

இவற்றையும் பார்க்கவும்[தொகு]

வெளியிணைப்புக்கள்[தொகு]