அனைத்துலகப் பாலைவனமும் பாலைவனமாதலும் ஆண்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

2006 ஆம் ஆண்டு அனைத்துலகப் பாலைவனமும் பாலைவனமாதலும் ஆண்டு என ஐக்கிய நாடுகள் அவையால் அறிவிக்கப்பட்டது. 2003 ஆம் ஆண்டு டிசம்பரில் கூடிய ஐக்கிய நாடுகள் பொதுச் சபையில் 58 ஆவது அமர்வில் இதற்கான தீர்மானம் (இல. A/RES/58/211) நிறைவேற்றப்பட்டது. உலகில் பாலைவனமாதல் அதிகரித்துச் செல்வதைத் தடுப்பதற்கு உதவுவதற்காகவே இத் தீர்மானம் எடுக்கப்பட்டது. இந்த விடயம் தொடர்பில் மக்களிடையே விழிப்புணர்வைத் தூண்ட உதவுமாறும், அந்த நோக்கத்துக்கான செயற்பாடுகளை ஆதரிக்குமாறும் நாடுகளையும், பன்னாட்டு அளவிலும் உள்நாட்டிலும் இயங்கும் மக்கள் அமைப்புக்களையும் தீர்மானம் கேட்டுக்கொண்டது[1].

நோக்கம்[தொகு]

இதன் நோக்கம் உலகின் பாலைவனங்கள் பற்றியும் சிறப்பாக பாலைவனமாதல் பிரச்சினை பற்றியும் மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவது ஆகும். காலநிலை மாற்றம், உயிரியல் பல்வகைமை இழப்பு ஆகியவற்றோடு பாலைவனமாதலும் மனிதகுலத்தைப் பயமுறுத்தும் ஒரு பெரிய பிரச்சினை என்பதையும்; நிலம் தரங்குறைதல், உலகின் மூன்றில் ஒரு பங்கு நிலப்பகுதியையும், நூற்றுக்கு மேற்பட்ட நாடுகளில் வாழும் ஏறத்தாழ ஒரு பில்லியன் மக்களையும் பாதிக்கிறது என்பதையும் மக்கள் அறியச் செய்வது இந்த நோக்கத்தின் ஒரு பகுதி. இத்துடன், உலகெங்கிலும் உள்ள பாலைவனங்களின் தனித்துவமான சூழல்மண்டலங்களையும், பண்பாட்டுப் பல்வகைமையையும் போற்றிப் பேணுவதும் இந்த ஆண்டின் நோக்கங்களில் ஒன்றாகும்.

குறிப்புக்கள்[தொகு]

  1. ஐக்கிய நாடுகள் பொதுச் சபைத் தீர்மானம் A/RES/58/211

இவற்றையும் பார்க்கவும்[தொகு]

வெளியிணைப்புக்கள்[தொகு]