உள்ளடக்கத்துக்குச் செல்

அனு ராகவன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அனு ராகவன்
Anu Raghavan
2017 ஆசிய தடகள சாம்பியன் பட்டப் போட்டியின் 400 மீட்டர் தடைதாண்டும் ஓட்டப்போட்டியில் வெள்ளிப் பதக்கத்துடன் அனு
தனித் தகவல்கள்
பிறந்த நாள்20 ஏப்ரல் 1993 (1993-04-20) (அகவை 31)
பிறந்த இடம்பாலக்காடு, கேரளா, இந்தியா
விளையாட்டு
நாடு இந்தியா
விளையாட்டுதடகளம்
நிகழ்வு(கள்)400 மீட்டர், தடை தாண்டுதல்
 
பதக்கங்கள்
பெண்கள் தடகளம்
நாடு  இந்தியா
ஆசிய தடகள சாம்பியன் பட்டப் போட்டி
வெள்ளிப் பதக்கம் – இரண்டாமிடம் 2017 புவனேசுவர் – பெண்கள் 400மீ தடை தாண்டுதல் {{{3}}}

அனு ராகவன் (Anu Raghavan) ஓர் இந்திய தடகள விளையாட்டு வீர்ர் ஆவார்.. இவர் 1993 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 20 ஆம் தேதியில் பிறந்துள்ளார். கேரளா மாநிலத்தைச் சேர்ந்த அனு ராகவன் 4 × 400 மீட்டர் தொடர் ஓட்டப்போட்டியில் வல்லமை பெற்றிருந்தார். 2016 ஆம் ஆண்டு நடைபெற்ற கோடை கால ஒலிம்பிக் போட்டிகளில் கலந்து கொண்ட 4 × 400 தொடர் ஓட்ட இந்திய தேசிய அணியில் இவர் சேர்க்கப்படவில்லை. இதற்காக இந்தியத் தடகள கூட்டமைப்பின் நடவடிக்கைகளை எதிர்த்து கேரள உயர்நீதி மன்றத்தில் 2016 ஆண்டு வழக்கு தொடர்ந்தார். கூட்டமைப்பின் ஊழல் நடவடிக்கைகளுக்கு எதிரான ஒரு போர் என்றும் இதை அவர் அறிவித்தார்"[1][2]. முன்னதாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஒலிம்பிக் பந்தய போட்டி அணியிலும், தெற்காசிய விளையாட்டுப் போட்டிகள் அணியிலும் கூட தன்னை நிர்வாகம் சேர்த்துக் கொள்ளவில்லை என்று கூட்டமைப்பின் மீது குற்றம் சாட்டினார். தேசிய பயிற்சி முகாமில் பங்கேற்று பயிற்சி பெறாமல் தான் முகாமுக்கு வெளியில் பயிற்சிக்கு சென்றதுதான் இதற்கு காரணமாக சொல்லப்பட்டதாகவும் அனு ராகவன் தெரிவித்தார்[3].

2017 ஆம் ஆண்டு நடைபெற்ற ஆசிய தடகள சாம்பியன் பட்டப் போட்டியின் 400 மீட்டர் தடைதாண்டும் ஓட்டப்போட்டியில் பந்தய தூரத்தை 57.22 வினாடிகளில் கடந்து அனு ராகவன் வெள்ளிப் பதக்கம் பெற்றார்[4]

மேற்கோள்கள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=அனு_ராகவன்&oldid=2718936" இலிருந்து மீள்விக்கப்பட்டது