அனுபவச் சூத்திரம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இரசாயனவியலில் இரசாயனச் சேர்வையொன்றின் அனுபவச் சூத்திரம் என்பது, அச் சேர்வையிலுள்ள மூலகங்களின் எளிய முழுவெண் விகிதமாகும்.[1] உதாரணமாக, ஐதரசன் பரவொட்சைட்டின் (H2O2) அனுபவச் சூத்திரம் HO ஆகும்.

அனுபவச் சூத்திரம் மூலம் அச் சேர்வையின் கட்டமைப்பு, சமபகுதியங்கள் அல்லது அச்சேர்வையிலுள்ள உண்மையான அணுக்களின் எண்ணிக்கை போன்ற எதையுமே அறிந்துகொள்ள முடியாது. மேலும் அயன் சேர்வைகள் மற்றும் SiO2 போன்ற இராட்சத மூலக்கூறுகளின் சூத்திரத்தைக் குறிப்பிடவும் பயன்படுத்தப்படுகிறது.

இதற்கு மறுதலையாக மூலக்கூற்றுச் சூத்திரம் மூலக்கூறு ஒன்றில் உள்ள ஒவ்வொரு வகையான அணுக்களின் எண்ணிக்கையையும் கட்டமைப்புச் சூத்திரம் அதன் கட்டமைப்பையும் அடையாளப்படுத்தும்.

உதாரணமாக, குளுக்கோசு (C
6
H
12
O
6
), ரைபோசு (C
5
H
10
O
5
), அசெற்றிக் அமிலம் (C
2
H
4
O
2
), மற்றும் ஃபோமல்டிகைட் (CH
2
O
) ஆகிய அனைத்தும் வித்தியாசமான மூலக்கூற்றுச் சூத்திரங்களைக் கொண்டிருப்பினும், இவை அனைத்தினதும் அனுபவச் சூத்திரம்: CH
2
O
ஆகும். இச்சூத்திரம் ஃபோமல்டிகைட்டுகான மூலக்கூற்றுச் சூத்திரமாகும். எனினும், அசெற்றிக்கமிலத்தின் சூத்திரம் இதன் அணுக்களின் எண்ணிக்கையின் இரு மடங்காகவும் ரைபோசின் சூத்திரம் ஐந்து மடங்காகவும், குளுக்கோசின் சூத்திரம் ஆறுமடங்காகவும் இருக்கும்.

உதாரணமாக, நேர்-எக்சேன் எனும் இரசாயனச் சேர்வை CH
3
CH
2
CH
2
CH
2
CH
2
CH
3
எனும் கட்டமைப்புச் சூத்திரத்தைக் கொண்டுள்ளது. இது 6 காபன் அணுக்களும், 14 ஐதரசன் அணுக்களும் நேர்ச்சங்கிலியொன்றில் இருப்பதைக் காட்டுகிறது. எக்சேனின் மூலக்கூற்றுச் சூத்திரம் C
6
H
14
ஆகவும், அனுபவச் சூத்திரம் C
3
H
7
ஆகவும் இருக்கும். இதன் அனுபவச் சூத்திரத்திலிருந்து C:H விகிதம் 3:7 என அறிய முடியும். வித்தியாசமான சேர்வைகள் ஒரே அனுபவச் சூத்திரத்தைக் கொண்டிருக்கலாம்.

மேற்கோள்கள்[தொகு]

  1. தனி மற்றும் பயன்பாட்டு வேதியியல் அனைத்துலக ஒன்றியம். "Empirical formula". Compendium of Chemical Terminology Internet edition.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அனுபவச்_சூத்திரம்&oldid=3771821" இலிருந்து மீள்விக்கப்பட்டது