அனிதா காரா
அனிதா காரா Anita Gara | |
---|---|
2009 இல் காரா | |
முழுப் பெயர் | காரா அனிதா |
நாடு | அங்கேரி |
பிறப்பு | 4 மார்ச்சு 1983 புடாபெசுட்டு அங்கேரி |
பட்டம் | அனைத்துலக மாசுட்டர் (2009) பெண்கள் கிராண்டு மாசுட்டர் (1997) |
உச்சத் தரவுகோள் | 2405 (சனவரி 2005) |
அனிதா காரா (Anita Gara) என்பவர் அங்கேரி நாட்டைச் சேர்ந்த பெண் சதுரங்க கிராண்டு மாசுட்டர் ஆவார். இவர் 1983 ஆம் ஆண்டு மார்ச்சு மாதம் நான்காம் நாள் பிறந்தார். பிடே அமைப்பு வழங்கும் பெண் கிராண்டு மாசுட்டர், அனைத்துலக பெண் சதுரங்க மாசுட்டர் போன்ற பட்டங்களுடன் சதுரங்கம் ஆடி வருகின்றார். 2000, 2001, 2009, 2013, 2016, 2017 ஆண்டுகளில் அங்கேரிய பெண்கள் சதுரங்க சாம்பியன் பட்ட்த்தை அனிதா வென்றிருக்கிறார்[1]. பெண்களுக்கான சதுரங்க ஒலிம்பியாடு, பெண்கள் ஐரோப்பிய சதுரங்க அணி சாம்பியன் பட்டப் போட்டி, 18 வயதுக்கு உட்பட்டோர் பெண்கள் சதுரங்கப் போட்டி போன்ற அணிகள் கலந்து கொள்ளும் சதுரங்கப் போட்டிகளில் அங்கேரி நாடு சார்பாக கலந்து கொள்ளும் பெண்கள் அணியில் அனித காரா பங்கு கொண்டு விளையாடியிருக்கிறார். அசர்பைசானின் பக்கூ நகரில் 2016 ஆம் ஆண்டு நடைபெற்ற சதுரங்க ஒலிம்பியாடு போட்டியில் விளையாடிய அனிதா 5 வது சதுரங்கப் பலகையில் விளையாடி தனிநபர் வெண்கலப் பதக்கத்தை வென்றார்[2]. அனிதாவின் சகோதரி டிசியா காராவும் ஒரு பெண்கள் கிராண்டு மாசுட்டர் ஆவார்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Gara Anita nyerte a női sakkbajnok" [Anita Gara has won the women's chess championship]. Origo.hu (in ஹங்கேரியன்). 2009-08-30. பார்க்கப்பட்ட நாள் 2011-10-08.
- ↑ "USA and China take gold in Baku Chess Olympiad". Chessdom. 2016-09-13. பார்க்கப்பட்ட நாள் 2017-06-15.
புற இணைப்புகள்
[தொகு]- Anita Gara chess games at 365Chess.com
- Anita Gara team chess record at OlimpBase.org