அனா மரியா பாட்ரிசியா பௌரிங்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

அனா மரியா பாட்ரிசியா பௌரிங் (Ana María Patricia Fauring) அர்கெந்தீனாவைச் சேர்ந்த ஒரு கணிதவியலாளர் ஆவார். சர்வதேசக் கணித ஒலிம்பியாட் மற்றும் பிற சர்வதேசப் போட்டிகளில் கலந்து கொள்கின்ற அர்கெந்தீனா அணிகளுக்கு பயிற்சி அளிப்பதில் ஈடுபட்டுள்ள முதன்மைக் கணிதவியலாளர் என்பதற்காக பால் எர்டோசு விருதை வென்றார்.[1]

1982 ஆம் ஆண்டில் புவனெசு ஐரிசு பல்கலைக்கழகத்தில் ஏஞ்சல் ரபேல் லாரட்டோனோ என்பவரின் மேற்பார்வையில் முனைவர் பட்டம் பெற்றார். இவருடைய ஆய்வறிக்கையின் தலைப்பு "கலப்பு திசையன் புலங்களில் நிலைத்தன்மைகளின் கருத்துக்கள்" என்பதாகும்.[2]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Patricia Fauring, Argentina". World Federation of National Mathematics Competitions. பார்க்கப்பட்ட நாள் 2019-04-19.
  2. கணித மரபியல் திட்டத்தில் அனா மரியா பாட்ரிசியா பௌரிங்