அனார்கலி கவுர் ஓனார்யர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

அனார்கலி கவுர் ஓனார்யர் (Anarkali Kaur Honaryar) ஒரு சீக்கிய ஆப்கான் அரசியல்வாதியாவார். [1] [2] 25 வயதில் அனார்கலி கவுர் ஒரு மருத்துவர், செயற்பாட்டாளர், வானொலி தொகுப்பாளர் மற்றும் சுதந்திரமான ஆப்கான் மனித உரிமைகள் குழு மற்றும் அதிகாரப்பூர்வ அரசியலமைப்பு குழு உறுப்பினர் என்று பல முகங்களுடன் இயங்கினார். ஆப்கானித்தானில் சிக்கித் தவிக்கும் சீக்கிய சமூகத்தினருக்கு அனார்கலி கவுர் ஒரு சிறந்த முன்மாதிரியாக இருந்திருகிறார். அனார்கலி கவுர் நாட்டின் சுதந்திர மனித உரிமைகள் ஆணையத்தில் பணியாற்றுகிறார். பெண்கள் சம உரிமை மற்றும் சனநாயகத்திற்காக தொடர்ந்து பிரச்சாரம் செய்து வருகிறார்.

ஆப்கானித்தானில் சுமார் 30,000 சீக்கியர்களும் இந்துக்களும் மட்டுமே இருந்தனர். மருத்துவர் அனார்கலி கவுர் ஓனார்யர் அவர்களில் ஒருவர். [3] ஆப்கானித்தானில் உள்ள அனைத்து சீக்கியர்களும் இந்திய பஞ்சாபிலிருந்து குடியேறியவர்கள் அல்ல. உண்மையில், பல நூற்றாண்டுகளாக இங்கு இருக்கும் சீக்கிய குடும்பங்கள் உள்ளன. சமீப காலம் வரை சீக்கியர்கள் கந்தகார், காபூல் மற்றும் பிற இடங்களில் வணிகங்களை நடத்தி வந்தனர். அனார்கலி கவுர் ஆப்கானித்தானின் தேசிய சட்டமன்றத்தின் முதல் முசுலீம் அல்லாத ஓர் உறுப்பினர் என்ற சிறப்புக்கு உரியவர் ஆவார். [4]

ஒரு பெண்ணிய ஆர்வலரான அனார்கலி பெண்ணினப் போராளியாக, கல்வி மற்றும் பெண்கள் மேம்பாட்டுச் செயல்பாடுகளால் அவர் பிறந்த நாட்டிலும் வெளிநாடுகளிலும் நன்கு அறியப்பட்ட முகமாக உள்ளார்.

தொழில்[தொகு]

தலிபான்கள் 2001 ஆம் ஆண்டு அகற்றப்பட்டபோது, அனார்கலி கவுர் காபூல் பல்கலைக்கழகத்தில் மருத்துவம் பயின்று கொண்டிருந்தார். இவர் தலிபான்களின் வீழ்ச்சிக்குப் பிறகு ஆப்கானித்தானின் இடைக்கால அரசாங்கத்தைத் தேர்ந்தெடுக்கும் லோயா சிர்காவின் உறுப்பினராகவும், ஆப்கானித்தான் அரசியலமைப்பு குழு உறுப்பினராகவும் இருந்தார். [5] 2006 ஆம் ஆண்டில் அனார்கலி கவுர் ஆப்கானித்தான் சுதந்திர மனித உரிமைகள் ஆணையத்தில் உறுப்பினரானார் .

2010 ஆம் ஆண்டில், நாட்டின் மெசுரானோய் சிர்காவுக்கு அனார்கலி கவுர் ஓனார்யர் தேர்ந்தெடுக்கப்பட்டார். மேலும் இம்மைல்கல்லை எட்டிய முதல் முசுலீம் அல்லாத பெண்மணியாக சிறப்பு பெற்றார். 2015 ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் தனது பதவியை விட்டு வெளியேறினார். [2]

22 ஆகஸ்ட் 2021 ஆம் ஆண்டு ஆகத்து மாதம் 22 ஆம் தேதியன்று , ஆப்கானித்தானின் தலிபான் முற்றுகை காரணமாக ஆப்கானித்தானில் இருந்து இந்தியப் படைகளால் மீட்கப்பட்ட மற்ற இந்தியர்களுடன் அவர் இந்தியா வந்தார் 2021. [6]

விருதுகள்[தொகு]

அனார்கலி கவுர் ஒரு நன்கு அறியப்பட்ட மனித உரிமை ஆர்வலர் [5] என்பதற்காகவும் சகிப்புத்தன்மை மற்றும் அகிம்சை ஊக்குவிப்புக்காகவும் யுனெசுகோ-மதன்யீத்து சிங் பரிசு வழங்கப்பட்டது. [2] "குடும்ப வன்முறை, கட்டாய திருமணங்கள் மற்றும் பாலின பாகுபாடு ஆகியவற்றால் அவதிப்படும் பெண்களுக்கு உதவி செய்ததற்காகவும், தனது நாட்டில் மனித கௌரவம் , மனித உரிமைகள், பரசுபர மரியாதை மற்றும் சகிப்புத்தன்மை ஆகியவற்றின் கொள்கைகளை ஊக்குவிப்பதற்கான அவரது அர்ப்பணிப்புக்காகவும்." [7] இவ்விருதுக்காக அனார்கலி கவுர் தேர்ந்தெடுக்கப்பட்டார். யுனெசுகோ-மதன்யீத் சிங் பரிசு ஒவ்வொரு இரண்டு ஆண்டுகளுக்கும் ஒரு முறை வழங்கப்படுகிறது. இந்திய எழுத்தாளர் மதன்யீத் சிங்கின் ஆதரவுடன் மகாத்மா காந்தியின் 125 ஆவது பிறந்தநாளை முன்னிட்டு 1995 ஆம் ஆண்டு இவ்விருது உருவாக்கப்பட்டது.

ரேடியோ ஃப்ரீ ஐரோப்பாவின் ஆப்கான் அத்தியாயத்தால் 2009 ஆம் ஆண்டின் சிறந்த நபராகவும் அனார்கலி கவுர் ஓனார்யர் தேர்ந்தெடுக்கப்பட்டார். [5]

மேற்கோள்கள்[தொகு]

  1. editor. "Sikh woman, man fight against former mujahideen in Aghanistan polls". 2019-07-17 அன்று பார்க்கப்பட்டது.
  2. 2.0 2.1 2.2 "2011 UNESCO-Madanjeet Singh Prize for the Promotion of Tolerance and Non-Violence to be awarded to Anarkali Honaryar (Afghanistan) and Khaled Abu Awwad (Palestine)". UNESCO. 16 November 2011.
  3. "Anarkali Kaur - SikhiWiki, free Sikh encyclopedia". www.sikhiwiki.org. 2021-05-05 அன்று பார்க்கப்பட்டது.
  4. Dr. Anarkali Kaur Honaryar
  5. 5.0 5.1 5.2 Marzban, Omid (24 March 2009). "Young Afghan Rights Activist Selected As 'Person Of The Year'". Radio Free Europe/Radio Liberty.
  6. https://economictimes.indiatimes.com/news/india/india-evacuates-over-20-afghan-sikhs-from-kabul-including-mps-anarkali-kaur-honaryar-narendra-khalsa/videoshow/85530542.cms
  7. "UNESCO awards peace hero defenders - Anarkali Honaryar & Khaled Abu Awwad". Woman News Network (WNN) (ஆங்கிலம்). 2011-11-17. 2021-05-05 அன்று பார்க்கப்பட்டது.