அனல்காற்று (நூல்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

அனல்காற்று ஜெயமோகன் எழுதிய தமிழ்ப் புதினம். 2009ல் அவரது இணையதளத்தில் தொடராக வெளிவந்தது. தமிழினி பதிப்பகத்தால் நூலாக வெளியிடப்பட்டது.

கதைக் களம்[தொகு]

அனல்காற்று பாலுறவுச் சிக்கலைப் பற்றிப் பேசும் நாவல். கதைநாயகன் அவனைவிட மூத்த, வயதுடைய தன் தாய்க்குத் தோழியாக இருக்கும் ஒரு பெண்ணிடம் பாலியல் தொடர்பு கொண்டிக்கிறான். அவனுக்கு இன்னொரு பெண்ணைத் திருமணம் முடிக்க அவன் தாய் முயல்கிறாள். அப்போது அவ்வுறவு பலவகையான உளவியல் நெருக்கடிகளுக்கு உள்ளாகிறது. மனித மனத்தின் பலவகையான நுட்பமான அறச் சிக்கல்களையும் தயக்கங்களையும் பற்றி இப்புதினம் பேசுகிறது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=அனல்காற்று_(நூல்)&oldid=2267381" இருந்து மீள்விக்கப்பட்டது