அந்தோனி ஓசாக்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

அந்தோனி என்றி ஓசாக் ( Anthony Hossack , பிறப்பு: மே 2 1867, இறப்பு: சனவரி 25 1925), இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர் ஆவார். இவர் எந்தவொரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொள்ளவில்லை. இருப்பினும் ஒரு முதல்தர துடுப்பாட்டப் போட்டியில் கலந்து கொண்டுள்ளார். 1889 ம் ஆண்டில், முதல்தர துடுப்பாட்டப் போட்டியில் பங்குகொண்டார்.

இங்கிலாந்தின் தொழிற்சாலை நகரமான வால்சலில் ஓசாக் பிறந்தார். ஆனால் சிக்வெல் நகரப் பள்ளியில் கல்வி கற்றார். 1882 மற்றும் 1886 க்கு இடையில் பள்ளி அணிக்காக விளையாடிய இவர் கடைசி ஆண்டில் கால்பந்து அணியின் தலைவர் ஆனார். அவர் கேம்பிரிட்சின் யேசசு கல்லூரியில் சேர்ந்தார். 1890 ஆம் ஆண்டில் கேம்பிரிட்சு பல்கலைக்கழகத்திற்காக "புளூ" விருதைப் பெற்றுத் தந்தார்[1][2].

மேற்கோள்கள்[தொகு]

  1. "Hossack, Anthony Henry (HSK886AH)". A Cambridge Alumni Database. University of Cambridge. 
  2. Betts, Graham (2006). England: Player by player. Green Umbrella Publishing. பக். 133. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:1-905009-63-1. 

வெளி இணைப்பு[தொகு]

அந்தோனி ஹோசாக் கிரிக் - இன்ஃபோ விளையாட்டுவீரர் விபரக்குறிப்பு. கடைசியாகப் பார்க்கப்பட்ட திகதி திசம்பர் 15, 2011.

"https://ta.wikipedia.org/w/index.php?title=அந்தோனி_ஓசாக்&oldid=2708072" இருந்து மீள்விக்கப்பட்டது