உள்ளடக்கத்துக்குச் செல்

அந்துவன் செள்ளை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

அந்துவன் செள்ளை சேர அரசன் இளஞ்சேரல் இரும்பொறையின் தாய். இரும்பொறை பதிற்றுப்பத்து நூலில் பாராட்டப்பெறும் ஒன்பதாம் பத்தின் பாட்டுடைத் தலைவன். இந்தப் பத்தின் பதிகப்பாடல் இவனது பெற்றோர் பெயர்களைக் குறிப்பிடுகிறது.

குட்டுவன் இரும்பொறை இவனது தந்தை.
தாய் அந்துவன் செள்ளை.
இந்த அந்துவன் செள்ளை என்பவள் மையூர் கிழான் என்பவனின் வேண்மாள்.

தள்ளை என்பது தாயைக் குறிக்கும் திசைச்சொல். அதுபோலச் செவிலியைக் குறிக்கும் திசைச்சொல் செள்ளை.

சேர அரசன் அந்துவனின் செவிலித் தாயை மையூர் கிழான் மணந்துகொண்டான். வேளிர் குடி மகளை "வேண்மாள்" என்றனர். இந்த வேண்மாளின் மகள் குட்டுவன் இரும்பொறைக்கு மனைவியானாள். இவர்களின் மகன்தான் இளஞ்சேரல் இரும்பொறை.

பதிகத்தில் உள்ள தொடர்

"குட்டுவன் இரும்பொறைக்கு மையூர் கிழாஅன் வேண்மாள் அந்துவனை செள்ளை ஈன்ற மகன் ... இளஞ்சேரல் இரும்பொறை"

மேலும் காண்க

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=அந்துவன்_செள்ளை&oldid=2565008" இலிருந்து மீள்விக்கப்பட்டது