அந்துவஞ்சாத்தன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஒல்லையூர் தந்த பூதப்பாண்டியன் சங்ககாலப் பாண்டிய அரசர்களில் ஒருவன். இவனது அரசவையில் ஐம்பெருங்குழுவைப் போல் ஐந்து நண்பர்கள் இருந்தனர்.

அவர்கள்

  1. மாவன்,
  2. ஆந்தை,
  3. அந்துவஞ்சாத்தன்,
  4. ஆதன் அழிசி,
  5. இயக்கன் எனப்பட்ட ஐவர். இவர்களில் ஒருவன் இந்த அந்துவஞ்சாத்தன்.

சங்கப்பாடல்களில் இவனைப் பற்றியுள்ள குறிப்புகள் பின்வருமாறு: இவனது பகைவர்கள் உடல் திணவெடுத்து இவனைத் தாக்க வருவதாகச் செய்தி வந்தது. பாண்டியன் வஞ்சினம் பேசுகிறான். அவர்களைப் புறங்காணேன் ஆயின் எனக்கு இன்னது நேரட்டும் என்கிறான். இந்த ஐவரோடும் என் கண் போன்ற நண்பரோடும்,கேளிரோடும் இனிமையாக மகிழ்ந்து திளைத்து இப்போது வாழ்கிறேன். பகைவரைப் புறம் காணாவிட்டால் இந்த மகிழ்வான வாழ்க்கை எனக்கு இல்லாமல் போகட்டும் என்கிறான்.

அந்துவஞ்சாத்தன் என்பவன் சேரர் மரபில் வந்தவன். 'உரைசால் அந்துவஞ்சாத்தன்' என்று இவன் சிறப்பிக்கப்படுவதால் இவன் ஒல்லையூர் தந்த பூதப்பாண்டியனுக்கு அமைச்சனாக விளங்கியவன் எனலாம்.(ஒல்லையூர் தந்த பூதப்பாண்டியன் பாடியது - புறநானூறு 71)

ஒப்பிட்டுக்கொள்க[தொகு]

அந்துவன்
அந்துவன் கீரன்
அந்துவன் செள்ளை
நல்லந்துவனார்
"https://ta.wikipedia.org/w/index.php?title=அந்துவஞ்சாத்தன்&oldid=2267306" இலிருந்து மீள்விக்கப்பட்டது