உள்ளடக்கத்துக்குச் செல்

அத்தேபள்ளி ராமமோகனராவு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

அத்தேபள்ளி ராமமோகனராவு (Addepalli Ramamohana Rao) தெலுங்கு கவிஞரும், இலக்கிய விமர்சகரும் ஆவார்.[1][2]

வாழ்க்கை[தொகு]

இவர் 1936ஆம் ஆண்டின் செப்டம்பர் ஆறாம் நாளில், இந்திய மாநிலமான ஆந்திரப்பிரதேசத்தில் உள்ள சிந்தகுண்டபாலெம் என்ற ஊரில் பிறந்தார். இவர் மனைவியின் பெயர் அன்னபூர்ணா. இவருக்கு உதயபாஸ்கர், பிரபாகர், ராதாகிருஷ்ணா, ராஜசேகர் ஆகிய நான்கு மகன்கள் உள்ளனர்.[2] இவர் ஸ்ரீ வெங்கடேஸ்வரா பல்கலைக்கழகத்தில் எம்.ஏ. படித்தார். இந்துக் கல்லூரியில் ஆசிரியராக பணிபுரிந்தார். பின்னர், இவர் 2016ஆம் ஆண்டின் ஜனவரி பதின்மூன்றாம் நாளில் இறந்தார்.[3].

எழுதிய நூல்கள்[2][தொகு]

 • மதுஜ்வாலா
 • அந்தர்ஜ்வாலா
 • கோதாவரி நா ப்ரதிபிம்பம்
 • ரக்தசந்தியா
 • சங்கம் சரணம் கச்சாமி
 • மெருபு புவ்வு
 • அயினாதைர்யங்கானே
 • பொகசூரின ஆகாசம்
 • ஸ்ரீஸ்ரீ கவிதாபிரஸ்தானம்
 • விமர்ச வேதிக சாகித்திய சமீட்சை
 • ஜாஷுவா கவிதா சமீட்சை
 • குந்துர்தி கவிதை
 • மினீகவிதை
 • திருஷ்டிபதம்
 • சத்ரீவாத கவித்வம்
 • அப்யுதய விப்லவ கவித்வாலு - சித்தாந்தாலு, சில்பரீதுலு
 • கீடுராயி
 • விலோகனம்
 • காலம்மீத சந்தகம்
 • தெரலு
 • பிரபஞ்சீகரண நேபத்யம்லோ மகிளா
 • ஆகுபச்சனி சஜீவ சமுத்ரம் நா நேலா
 • தெலுகு கவித்வம்லோ ஆதுனிகதை

விருதுகள்[தொகு]

 • 2001: உலகத் தெலுங்கு பல்கலைக்கழகம் வழங்கிய பிரதிபா விருது (இலக்கிய விமர்சகர் என்ற முறையில்)[4]
 • உமர் ஆலீஷா விருது
 • அரசம் விருது
 • திலக் விருது
 • ஆந்திரசாரஸ்வத சமிதி ஜீவன சாபல்ய விருது
 • தங்கிரால விருது
 • ஜாஷுவா விருது
 • புலிகண்டி சாகிதீ விருது
 • போயிபீமன்ன சாகிதீ விருது

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=அத்தேபள்ளி_ராமமோகனராவு&oldid=4008031" இலிருந்து மீள்விக்கப்பட்டது