அதிதி லகிரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

அதிதி லகிரி ( Aditi Lahiri 14 சூன் 1952) என்பவர் இந்தியாவைச் சேர்ந்த செருமனி மொழியியலாளர்; ஆக்சுபோர்டு பல்கலைக் கழகத்தில் பேராசிரியராக உள்ளார்.[1]

கல்வித் தகுதிகள்[தொகு]

கொல்கத்தாவில் பிறந்த[2] அதிதி லாகிரி கொல்கத்தாவில் உள்ள பெத்துன் கல்லூரியிலும் பின்னர் கொல்கத்தா பல்கலைக்கழகத்திலும் பயின்றார்.[3] ஒப்பியன் மொழியியலில் ஆய்வுப் பட்டத்தைக் கொல்கத்தா பல்கலைக் கழகத்திலும், மொழிநூல் ஆய்வறிஞர் பட்டத்தை பிரவுன் பல்கலைக்கழகத்திலும் பெற்றார்[4].

பணிகள்[தொகு]

லாசு ஏஞ்சல்சில் உள்ள கலிபோர்னியா பல்கலைக் கழகத்தில், பின்னர் சாண்டா குரூசில் உள்ள கலிபோர்னியா பல்கலைக் கழகத்தில் ஆசிரியராகப் பணி புரிந்தார். நெதர்லாந்து மாக்சு பிளாங்க் நிறுவனத்திலும் பணியாற்றினார். செருமனியில் உள்ள கான்ஸ்டன்ஸ் பல்கலைக் கழகத்திலும் தற்பொழுது ஆக்சுபோர்டு சாமர்வில் கல்லூரியிலும் பணி செய்கிறார்.

சிறப்பு விருதுகள்[தொகு]

2000 ஆம் ஆண்டில் லீப்னிஸ் பரிசைப் பெற்றார்[5]. 2007 இல் யுரோப்பிய அகாதமிய உறுப்பினர் என்னும் விருதும் 2010 இல் பிரிட்டிசு அகாதமியின் மதிப்புறு பேராசிரியர் பட்டமும் இவருக்கு வழங்கப்பட்டன. 2013 ஆம் ஆண்டில் அமெரிக்க மொழியியல் சொசைட்டியின் மதிப்புறு வாணாள் உறுப்பினர் எனவும் கவுரவிக்கப்பட்டார்.[6]

மேற்கோள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=அதிதி_லகிரி&oldid=2268111" இருந்து மீள்விக்கப்பட்டது