அதிசய உலகம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அதிசய உலகம்
இயக்கம்சக்தி ஸ்காட்
தயாரிப்புஆர். பானுசித்ரா
கதைசக்தி ஸ்காட்
இசைசக்தி ஸ்காட்
நடிப்பு
 • லிவிங்ஸ்டன்
 • ஸ்ரீ லட்சுமி
 • மன்னன் பிருத்விராஜ்
 • ஆனந்தக்கண்ணன்
 • ஜார்ஜ் ஆண்டனி
 • லதாராவ்
ஒளிப்பதிவுஜி.சதிஷ்
கலையகம்
 • டிட்டு புரொடக்சன்ஸ்
 • ட்ரீம் கேட் அனிமேஷன்
வெளியீடு10 ஆகத்து 2012 (2012-08-10)(இந்தியா)
ஓட்டம்95 நிமிடங்கள்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

அதிசய உலகம் 2012 ஆம் ஆண்டு சக்தி ஸ்காட் இயக்கத்தில், ஆர். பானுசித்ரா தயாரிப்பில்[1], லிவிங்ஸ்டன் மற்றும் ஸ்ரீ லட்சுமி நடிப்பில் வெளியான அறிவியல் புனைவு தமிழ் திரைப்படம்[2]. டைனோசர்களை அசைப்படம் முறையில் 3டி (முப்பரிமாண படிமம்) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்திக் காட்சிப்படுத்தி தயாரிக்கப்பட்ட முதல் இந்தியத் தமிழ் திரைப்படம்[3][4][5][6][7][8].

கதைச்சுருக்கம்[தொகு]

விஞ்ஞானி நீலகண்டன் (லிவிங்ஸ்டன்) காலப் பயணம் செய்ய உதவும் கால எந்திரம் ஒன்றைப் புதிதாக உருவாக்குகிறார். அதன் மூலம் காலத்தில் பின்னோக்கியோ, முன்பாகவோ செல்ல இயலும். வர்ஷா (ஸ்ரீ லட்சுமி என். நாயர்) மற்றும் விகாஸ் (பிருத்வி) இருவரும் நீலகண்டனின் பேரக்குழந்தைகள்.

நீலகண்டன் இல்லாதபோது ஆய்வகத்திற்குள் வரும் இருவரும் விளையாடிக் கொண்டிருக்கும்போது வர்ஷா எறியும் பந்து கால எந்திரத்தில் பட்டு இயந்திரம் தானே இயங்கத் தொடங்குகிறது. அப்போது அறைக்குள் வரும் நீலகண்டன் நடக்க இருக்கும் விபரீதத்தை உணர்ந்து இயந்திரத்தை நிறுத்த முனைகிறார்.ஆனால் அதற்குள் நேரம் கடந்துவிட நீலகண்டன் மற்றும் அவரது இரு பேரக்குழந்தைகள் மூவரும் கால இயந்திரத்தில் பின்னோக்கிச் செல்கின்றனர். அவர்கள் டைனோசர்கள் வாழ்ந்த காலத்திற்குச் செல்கின்றனர்.

டைனோசர்கள் மற்றும் அக்காலத்தில் வாழ்ந்த பல விதமான விலங்குகளைக் காண்கின்றனர். அவர்களுக்கு ஆச்சர்யமும் பயமும் கலந்த அனுபவத்தைக் கொடுக்கிறது. அவர்கள் தற்போதைய காலத்திற்குத் திரும்ப முயற்சிக்கின்றனர். ஆனால் கால எந்திரம் செயல்பட மின்சாரம் அவசியம். ஆனால் அவர்கள் இருப்பதோ மின்சாரம் கண்டறியப்படாத காலம். தங்களுக்கு ஏற்படும் இடையூறுகளை சமாளித்து அவர்கள் தற்போதைய காலத்திற்கு எப்படி மீண்டும் வந்தனர் என்பது மீதிக்கதை.

நடிகர்கள்[தொகு]

 • லிவிங்ஸ்டன் - விஞ்ஞானி நீலகண்டன்
 • ஸ்ரீ லட்சுமி என். நாயர் - வர்ஷா
 • பிருத்வி - விகாஸ்
 • ஜார்ஜ் விஷ்ணு
 • ஆனந்தக் கண்ணன்
 • லதாராவ்
 • மன்னன் பிருத்விராஜ்
 • லேனா மோகன்

தயாரிப்பு[தொகு]

2012 ஆம் ஆண்டு 3டி தொழில்நுட்பத்தில் வெளியான அம்புலி திரைப்படத்திற்குப் பிறகு அத்தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி தயாரிக்கப்படும் படம் 'அதிசய உலகம்'[9].

இத்திரைப்படம் டூயல் லென்ஸ் பானாசோனிக் 3டி ஒளிப்பதிவுக் கருவியின் மூலம் படம் பிடிக்கப்பட்டது[10].

இத்திரைப்படத்தில் டைனோசர்கள் கணினித் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி அசைப்படம் முறையில் படமாக்கப்பட்டது[11].

பரிந்துரை[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

 1. "டிட்டு புரொடக்சன்ஸ் தயாரிப்பு". http://www.tamilcinetalk.com/tag/%E0%AE%9C%E0%AF%86%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0/. 
 2. "அதிசய உலகம்". http://ibnlive.in.com/news/adhisaya-ulagam-to-hit-the-screens-on-august-10/279181-71-180.html. 
 3. "அதிசய உலகம்". https://spicyonion.com/tamil/movie/adhisaya-ulagam-3d/. 
 4. "அதிசய உலகம்". https://tamil.filmibeat.com/news/five-tamil-3-d-movies-row-162895.html. 
 5. "அதிசய உலகம்". https://tamilmedia4.wordpress.com/2012/08/11/%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%AF-%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%95/. 
 6. "அதிசய உலகம்". https://ctd.tn.gov.in/documents/10184/30906/G.O+198+%28TNET%29+2012/640aede8-9b1c-49ba-9943-0acb8db2507c?version=1.0. 
 7. "அதிசய உலகம்". http://entertainment.oneindia.in/tamil/movies/adisaya-ulagam/story.html. 
 8. "அதிசய உலகம்". http://twitchfilm.com/2012/02/wtf-is-adhisaya-ulagam-dinosaurs-talking-dogs-time-machines-in-3d-thank-you-india.html. 
 9. "அதிசய உலகம்". http://www.newsalai.com/2012/03/3d.html. [தொடர்பிழந்த இணைப்பு]
 10. "ஒளிப்பதிவு". http://www.thehindu.com/todays-paper/tp-features/tp-metroplus/fighting-piracy/article3724835.ece. 
 11. "அசைப்படம்". http://www.behindwoods.com/tamil-movie-news-1/oct-11-04/adhisaya-ulagam-3d-shakthi-scott-28-10-11.html. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=அதிசய_உலகம்&oldid=3659266" இருந்து மீள்விக்கப்பட்டது