டைனோசர் (திரைப்படம்)
டைனோசர் | |
---|---|
![]() பட வெளியீட்டுச் சுவரொட்டி | |
இயக்கம் |
|
தயாரிப்பு | பாம் மார்ஸ்டென் |
திரைக்கதை |
|
இசை | ஜேம்ஸ் நியூட்டன் ஹவார்ட் |
ஒளிப்பதிவு |
|
படத்தொகுப்பு | எச். லீ பீட்டர்சன் |
கலையகம் | வால்ட் டிஸ்னி அனிமேஷன் ஸ்டுடியோஸ் த சீக்ரட் லேப் |
விநியோகம் | வால்ட் டிஸ்னி பிக்சர்ஸ் மூலம் பியூனா விஸ்டா பிக்சர்ஸ் வெளியீடு[a] |
வெளியீடு | மே 13, 2000(El Capitan Theatre) மே 19, 2000 (United States) |
ஓட்டம் | 82 நிமிடங்கள்[1] |
நாடு | அமெரிக்க ஐக்கிய நாடுகள் |
மொழி | ஆங்கிலம் |
ஆக்கச்செலவு | $127.5 மில்லியன்[1] |
மொத்த வருவாய் | $349.8 மில்லியன்[1] |
டைனோசர் (Dinosaur) 2000 ஆம் ஆண்டு வெளியான அமெரிக்க சாகச இயங்குபடம் ஆகும். வால்ட் டிஸ்னி பியூச்சர் அனிமேஷன் நிறுவனம் தி சீக்ரெட் லேப் உடன் இணைந்து தயாரித்த இப்படம் வால்ட் டிஸ்னி பிக்சர்ஸால் வெளியிடப்பட்டது. இந்தப் படத்தை ரால்ஃப் ஜோண்டாக் மற்றும் எரிக் லெய்டன் இயக்கியுள்ளனர். பாம் மார்ஸ்டன் தயாரித்துள்ளார். ஜான் ஹாரிசன், ராபர்ட் நெல்சன் ஜேக்கப்ஸ் மற்றும் வாலன் கிரீன் ஆகியோரால் எழுதப்பட்ட திரைக்கதையிலிருந்தும், ஜோண்டாக் மற்றும் தாம் என்ரிக்வெஸுடன் சேர்ந்து மூவரும் இணைந்து எழுதிய கதையிலிருந்தும் இது வெளிவந்துள்ளது. இதில் டி. பி. ஸ்வீனி, ஆல்ஃப்ரே வுடார்ட், ஒஸ்ஸி டேவிஸ், மேக்ஸ் கேசெல்லா, ஹேடன் பனெட்டியர், சாமுவேல் இ. ரைட், ஜூலியானா மார்குலீஸ், பீட்டர் சிராகுசா, ஜோன் ப்ளோரைட் மற்றும் டெல்லா ரீஸ் ஆகியோரின்பின்னணி குரல்கள் இடம்பெற்றுள்ளன.
கதை
[தொகு]படத்தின் கதை, ஒரு வெப்பமண்டலத் தீவில் உள்ள ஒரு லெமூர் குடும்பத்தால் தத்தெடுக்கப்பட்டு வளர்க்கப்பட்ட ஒரு இளம் இகுவானோடனைப் பின்தொடர்கிறது. ஒரு பேரழிவு தரும் விண்கல் தாக்கத்தால் அவர்கள் நிலப்பகுதிக்குத் தள்ளப்படுகிறார்கள்; ஒரு புதிய வீட்டைக் கண்டுபிடிக்கப் புறப்பட்டு, "கூடு கட்டும் மைதானங்களை" நோக்கிச் செல்லும் டைனோசர்களின் கூட்டத்துடன் இணைகிறார்கள்.
தயாரிப்பு
[தொகு]1994 ஆம் ஆண்டில், வால்ட் டிஸ்னி பியூச்சர் அனிமேஷன் இந்த திட்டத்தின் வளர்ச்சியைத் தொடங்கியது. டைனோசர்களை உருவாக்க மென்பொருளை உருவாக்க பல ஆண்டுகள் செலவிட்டது. டைனோசரில் இடம் பெற்றுள்ள கதாபாத்திரங்கள் கணினியால் உருவாக்கப்பட்டவை. இருப்பினும், பெரும்பாலான பின்னணிக் காட்சிகள் நேரடி-செயல்பாடு கொண்டவை. அமெரிக்கா மற்றும் ஆசியா போன்ற பல்வேறு கண்டங்களில் பல பின்னணிகள் காணப்பட்டன; பல்வேறு தெபுய் மலைகளும், ஏஞ்சல் அருவிகளும் படத்தில் தோன்றும். $127.5 மில்லியன் செலவில் எடுக்கப்பட்ட டைனோசர் அந்த நேரத்தில் மிகவும் விலையுயர்ந்த கணினி-இயங்குபடமாக இருந்ததாகக் கூறப்படுகிறது.[2][3] இத்திரைப்படம் வால்ட் டிஸ்னி பியூச்சர் அனிமேஷன் நிறுவனம் தயாரித்த முதல் கணினி இயங்குபடம் ஆகும்.
வெளியீடு
[தொகு]டைனோசர் மே 19, 2000 அன்று வெளியிடப்பட்டது. விமர்சகர்களிடமிருந்து பொதுவாக நேர்மறையான விமர்சனங்களைப் பெற்றது. படத்தின் தொடக்க வரிசை, ஒலிப்பதிவு மற்றும் இயங்கு பட அசைவை பாராட்டினர். ஆனால் கதையின் அசல் தன்மை இல்லாததால் விமர்சிக்கப்பட்டது.[4] இந்த படம் உலகளவில் $349 மில்லியன் வசூலித்தது. 2000 ஆம் ஆண்டில் ஐந்தாவது அதிக வசூல் செய்த படமாக மாறியது.[1] இது 2001 ஆம் ஆண்டில் நான்காவது சிறந்த விற்பனையான வீட்டு காணொளி வெளியீடாக மாறியது. 10.6 மில்லியன் பிரதிகள் விற்று $198 மில்லியன் விற்பனையைப் பெற்றது.[5]
மேலும் படிக்க
[தொகு]- Kurtti, Jeff (2000). Dinosaur: The Evolution Of An Animated Feature. Disney Editions. ISBN 978-0-786-85105-8.
குறிப்புகள்
[தொகு]- ↑ மூலம்
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 1.2 1.3 "Dinosaur (2000)". பாக்சு ஆபிசு மோசோ. Archived from the original on September 6, 2014. Retrieved December 9, 2011.
- ↑ Ansen, David; Chang, Yahlin (May 15, 2000). "Building a Better Dinosaur". நியூஸ்வீக். pp. 58–64. Retrieved May 17, 2020.
- ↑ Eller, Claudia (May 12, 2000). "Disney Chief Lets Out Roar Amid Anxiety Over Costly 'Dinosaur'". Los Angeles Times இம் மூலத்தில் இருந்து April 6, 2023 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20230406194021/https://www.latimes.com/archives/la-xpm-2000-may-12-fi-29176-story.html.
- ↑ Stewart, James B. (2005). DisneyWar. New York: Simon & Schuster. p. 356. ISBN 0-684-80993-1.
- ↑ "Year End 2001 Top-selling overall". Variety. December 30, 2001 இம் மூலத்தில் இருந்து July 29, 2019 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20190729231959/https://variety.com/2001/biz/news/year-end-2001-top-selling-overall-627028/.
வெளி இணைப்புகள்
[தொகு]