அண்ணா சதுக்கம்
Jump to navigation
Jump to search
அண்ணா நினைவிடம், தமிழ்நாட்டின் மறைந்த முதலமைச்சர் கா. ந. அண்ணாதுரை நினைவாக சென்னை மெரீனா கடற்கரையில், 1969ம் ஆண்டு கட்டப்பட்டது. பின்னர் ஜெ. ஜெயலலிதா முதல்வராக இருந்த காலத்தில் இந்நினைவகம் விரிவுபடுத்தப்பட்டது. [1] இந்த நினைவகத்தில் பசுமையான குழந்தைகள் பூங்காவாகவும் உள்ளது. இந்நினைவகம் அருகே எம். ஜி. ஆர் நினைவிடம் உள்ளது. அண்ணா சதுக்க வளாகத்தில், அண்ணா நினைவிடத்தின் பின்புறத்தில் 9 ஆகஸ்டு 2018ல் மறைந்த முன்னாள் முதலமைச்சர் மு. கருணாநிதியின் உடல் அடக்கம் செய்யப்பட்டது. [2]