அணு ஆயுதப்போர் நடவடிக்கை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

அணு ஆயுதப்போர் நடவடிக்கை[தொகு]

அணு ஆயுதப்போரில் போர்த்திறஞ்சார்ந்த விமானங்கள் வழியாகவும், செல்லும் வழியைக் கட்டுப்படுத்திச் செலுத்தப்படும் ஏவுகணைகள் (guided missiles) வழியாகவும், பூமியைச் சுழன்று வரக்கூடிய துணைக் கோள்கள் (Earth satilites) வழியாகவும் அல்லது வேறு எந்த போர்த்திறம் சார்ந்த, எடுத்துச் சென்று வழங்கிடும் அமைப்புகள் (Strategic delivery systems.) வழியாகவும், அணு குண்டுகள் கொண்டு செல்லப்பட்டு வீசப்படுகின்றன. கொல்லக்கூடிய ஆற்றல் கொண்ட ஹைட்ரஜன் குண்டுகள் இப்போர் நடவடிக்கைகளில் பெரும் அழிவினைத் தோற்றுவிக்கின்றன. இதில் பரவலான மறுக்க முடியாத உண்மை யாதெனில் பெரும் வல்லரசுகள் இப்போரில் திருப்பித் தாக்கத்தக்க வல்லமை பெற்றிருப்பதால், இப்போர் மனித சமுதாயத்தின் தற்கொலைக்கு ஒப்பானதாகும். இவ்வாறாக அணுப்போரில் ஓர் இக்கட்டான சூழ்நிலை உருவாக்கப்படுகின்றது. இதனால் எந்தப் பகுத்தறிவுடைய அரசியல் தலைவனும் தானாகவே இப்போரினைத் தொடங்கமாட்டான். ஆனால் இதிலுள்ள அபாயம் யாதெனில் இவ்வணுவாயுதப் போர் தற்செயலாகவும், கோபத்தினாலும் தவறாகப் புரிந்து கொள்வதாலும் அல்லது வரம்புக்கு உட்படுத்தப்பட்ட போரின் விரிவாக்கமாகவும் (Escalation of limited war) ஏற்படலாம்.

நூலோதி[தொகு]

Encyclopaedia Britannica Vol.I P 629. 15th Edn, 1982.

மேற்கோள்[தொகு]

  1. தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகம் அறிவியல் களஞ்சியம் தொகுதி 1 பக்கம் 419.