அட்டு பவளத்தீவு
அட்டு பவளத்தீவு (Addu Atoll), முன்னதாக சீனு பவளத்தீவு (Seenu Atoll), மாலைத்தீவுகளின் தென்கோடியில் அமைந்துள்ள பவளத்தீவு ஆகும். அட்டு பவளத்தீவும் இதன் வடக்கே 30 கிமீ தொலைவில் அமைந்துள்ள ஃபுவமுலாவும் இணைந்து மாலைதீவுகளை தென் அரைக்கோளத்தின் அங்கமான நாடாக விரிவுபடுத்துகிறது. மாலேயின் தெற்கே 478 கிமீ அட்டு பவளத்தீவு அமைந்துள்ளது. மாலைதீவுகளின் இரு நகரங்களில் ஒன்றான அட்டு நகரம் இத்தீவில் அமைந்துள்ளது. இந்த நகரம் அட்டு பவளத்தீவின் குடிபெயரத்தக்க பகுதிகளான இயற்கைத் தீவுகள் ஹுல்ஹுதூ, மரதூ, ஃபெய்தூ மற்றும் ஹிதாதூவில் அமைந்துள்ளது. இந்தப் பவளத்தீவில் உள்ள பல தீவுகள், கான் பன்னாட்டு வானூர்தி நிலையம் அமைந்துள்ள கான் தீவு உட்பட, மனிதர் வசிக்காதவையாக உள்ளன.[1]
மேற்கோள்கள்[தொகு]
- ↑ https://plus.google.com/+UNESCO (2020-11-06). "Addu Atoll Biosphere Reserve, Maldives". UNESCO (ஆங்கிலம்). 2022-09-25 அன்று பார்க்கப்பட்டது.
வெளி இணைப்புகள்[தொகு]
பொதுவகத்தில் Addu Atoll தொடர்பாக ஊடகக் கோப்புகள் உள்ளன.