அடென்சியோயைட்டு
Appearance
அடென்சியோயைட்டு (Atencioite) என்பது Ca2Fe2+3Mg2Be4(PO4)6(OH)4•6H2O என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கால்சியம் இரும்பு பாசுப்பேட்டு வகைக் கனிமமாகும். பிரேசில் நாட்டிலுள்ள மினாசு கெரைசு மாநிலத்தின் திவினோ தாசு லாரன்யெய்ராசு நகராட்சியில் முதன் முதலில் அடென்சியோயைட்டு கனிமம் கண்டறியப்பட்டது. ஒளிபுகும் தன்மையும் பசுமை கலந்த பழுப்பு நிறமும் கொண்ட கனிமமாக அடென்சியோயைட்டு கிடைக்கிறது. பிரேசில் நாட்டின் சாவோ பாவ்லோ பல்கலைகழகத்தின் கனிமவியல் பேராசிரியரான அடென்சியோவின் நினைவாக கனிமத்திற்கு அடென்சியோயைட்டு என பெயர் சூட்டப்பட்டது. [1]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Atencioite பரணிடப்பட்டது 2019-04-06 at the வந்தவழி இயந்திரம் on mindat.org