உள்ளடக்கத்துக்குச் செல்

அஜிதா சுசித்ரா வீரா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அஜிதா சுசித்ரா வீரா
திரைப்பட இயக்குனர்

அஜிதா சுசித்ரா வீரா ( Ajita Suchitra Veera ) ஒரு இந்தியத் திரைப்பட இயக்குனரும், எழுத்தாளரும், பத்திரிக்கைகளுக்கு படங்களை வரைபவரும், புகைப்படக் கலைஞரும், திரைப்பட தயாரிப்பாளரும் ஆவார். அஜிதா மிகவும் காட்சி, பிரமாண்டம், காவியம், திரைப்பட பாணி, வழக்கத்திற்கு மாறான கதை அமைப்புகளை உடைத்து, யதார்த்தம் மற்றும் கற்பனை, கற்பனை, கனவுகள், அறிவியல், தத்துவம், மனோதத்துவ மற்றும் மனிதநேயக் கருத்துக்களுடன் மிகவும் பிரபலமானவர். இவரது "பாலாட் ஆஃப் ருஸ்டம்" திரைப்படம் 2014 ஆம் ஆண்டின் சிறந்த திரைப்படத்திற்கான அகாதமி விருது போட்டியில் இருந்தது [1] இவரது முந்தைய குறும்படமான "நோட்ஸ் ஆன் ஹெர்" 2003 ஆம் ஆண்டு அகாதமி விருதுக்கு அதிகாரப்பூர்வமாக நுழைந்தது [2] "பாலாட் ஆஃப் ருஸ்டம்", என்ற இவரது முதல் திரைப்படத்தில் படத்தொகுப்பு, ஒலி வடிவமைப்பு மற்றும் இசையுடன் இணைந்து எழுதி, இயக்கி, தயாரித்து, தயாரிப்பு வடிவமைப்பையும் மேற்கொண்டிருந்தார். இப்படம் ஜெர்மனியின் ஹைடெல்பெர்க்கில் நடந்த, 61வது சர்வதேச திரைப்பட விழாவில் "சக்திவாய்ந்த ஒளிப்பதிவு கவிதை, காவியம்" ஆகியவற்றிக்காக பாராட்டப்பட்டது.[3][4]

ஆரம்ப கால வாழ்க்கை

[தொகு]

அஜிதா சுசித்ரா வீரா தென்னிந்தியாவில் ஐதராபாத்தில் பிறந்தார். அவரது தந்தை அஞ்சன் பாபு ஒரு கேலிச்சித்திரம் வரைபவராகவும், பத்திரிக்கைக்கு படங்களை வரைபவராக இருந்தார். இவரது தாயார் உஷா ராணி, வங்கியாளராக மாறிய பத்திரிகையாளர். மூன்று வயதில் ஒரு ஓவியராக இருந்த தன் தந்தையிடம் ஓவியம் வரையக் கற்றுக் கொள்ளத் தொடங்கினார். மேலும் தனது தந்தையின் சிறிய தனியார் புகைப்பட அரங்கத்தில் ஓவியம் வரைதல், படிப்பது, திரைப்படங்கள் பார்ப்பது மற்றும் புகைப்படங்களை அச்சிடுவது ஆகியவற்றில் கழித்தார். வீராவின் தந்தை பலவிதமான புகைப்படக் கருவிகளை அறிமுகப்படுத்தினார். மேலும் அவர் ஊசித்துளை காமராக்கள் மற்றும் பிற அறிவியல் சாதனங்களை தயாரிப்பதில் ஈடுபட்டார். இது குழந்தையான இவரைக் கவர்ந்தது.[5][6] இவர் அறிவியலில் (செயின்ட் ஆன்ஸ் கல்லூரி, ஐதராபாத்) பட்டம் பெற்றார். ஆனாலும், இவர் திரைப்படம் மீதான தனது ஆர்வத்தைத் தொடர்ந்தார். ஒருசில நாடகங்களில் நடித்த பிறகு, இந்தியாவின் புகழ்பெற்ற தேசிய திரைப்பட நிறுவனமான புனேவில் உள்ள இந்திய திரைப்பட மற்றும் தொலைக்காட்சி நிறுவனத்தில் சேர்ந்தார்.[7] அங்கு திரைப்பட இயக்கத்தில் பட்டம் பெற்றார்.

சான்றுகள்

[தொகு]
  1. Lattanzio, Ryan. "289 Feature Films Eligible for Best Picture Oscar". Indiewire. Archived from the original on 2 March 2014. பார்க்கப்பட்ட நாள் 20 January 2014.
  2. Pasupulate, Karthik. "Ajita Suchitra Veera's film in Oscar contention". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. Archived from the original on 8 January 2014. பார்க்கப்பட்ட நாள் 20 January 2014.
  3. [1]
  4. Mannheim
  5. Bansal, Varsha. "Back to roots with a ballad". New Indian Express. Archived from the original on 23 ஆகஸ்ட் 2012. பார்க்கப்பட்ட நாள் 20 January 2014. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  6. Mishra, Bikas. "People take time to understand and relate to new or unique films: Ajita Suchitra Veera, director of Ballad of Rustom". Dear Cinema. Archived from the original on 13 April 2014. பார்க்கப்பட்ட நாள் 20 January 2014.
  7. Singh, Rajesh. "Osian's Cinefan Best Director winner Ajita Suchitra Veera on her film BALLAD OF RUSTOM". Bollywood Trade. Archived from the original on 13 ஏப்ரல் 2014. பார்க்கப்பட்ட நாள் 20 January 2014. {{cite web}}: Check date values in: |archive-date= (help)

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=அஜிதா_சுசித்ரா_வீரா&oldid=4110111" இலிருந்து மீள்விக்கப்பட்டது