அசைவு செடி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அசைவு செடி

வகைப்பாடு[தொகு]

தாவரவியல் பெயர் : டெஸ்மோடியம் கைரான்ஸ் Desmodium gyrans

குடும்பம்  : லெகுமின்னேசே (Leguminosae)

இதரப் பெயர்[தொகு]

  • தந்திச் செடி (Telegrap Plant)

செடியின் அமைவு[தொகு]

டெஸ்மோடியம் கைரான்ஸ்

இச்செடி 2 முதல் 4 அடி உயரம் வளரக் கூடியது. கோடைக் காலத்தில் நன்கு வளர்ந்து ஒரு சிறு புதர் போல் ஆகிறது. இச்செடிக்கு சூட்டடுப்பில் வரும் அளவிற்கு வெப்பம் தேவைப்படுகிறது. இது 3 இலைகள் உள்ள கூட்டி கூட்டிலையுடையது. இதில் எந்த இலை மிகச்சிறியதோ அது சூரியனின் ஒளிக்கு ஏற்ப இலை நகர்கிறது. இது அனைத்துத் திசைகளிலும் நகர்கிறது. இப்படி நகர்வதால் இச்செடியை பலர் வளர்க்கின்றனர். இச்செடியில் இளம் ஊதா சிவப்பு மலர்கள் வருகிறது. இதனுடைய காய் தட்டையாகவும், ஒன்றோடு ஒன்று இணைந்து ஓடும் உடையது. இவை முதிர்ந்த பிறகு துண்டுத் துண்டாக உடைந்து விலங்குகள் துணி ஆகியவற்றில் ஒட்டிக்கொண்டுச் சென்று புதிய இடங்களில் விழுந்து முளைக்கிறது.

விதைகள்

காணப்படும் பகுதிகள்[தொகு]

இச்செடி இலங்கை மற்றும் பிலிப்பைன் நாடுகளில் வளர்கிறது. இச்சாதியில் 170 இனச் செடிகள் உள்ளன.

மேற்கோள்[தொகு]

[1] | 1 || சிறியதும் - பெரியதும் [1] || அறிவியல் வெளியீடு || ஜூன் 2001

  1. சிறிதும் - பெரியதும். அறிவியல் வெளியீடு. http://books.google.com/books/about/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF.html?id=vKXyPAAACAAJ. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=அசைவு_செடி&oldid=3932676" இலிருந்து மீள்விக்கப்பட்டது