அசெட்டிலீன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

அசெட்டிலீன் (Acetylene) இவ்வா கால்சியம் கார்பைடு என்ற திடநிலை சேர்மமும் நீரும் வினைபுரிவதால் உண்டாகிறது. இதை மின்சாதனங்கள் வருவதற்கு முன் கார்களின் முன்விளக்குகளில் ஒளி கிடைக்கப் பயன்படுத்தினார்கள். ஆக்சிஜனுடன் தகுந்த விகிதத்தில் கலந்த எரித்தால் 3000˚-க்கு மேல் வெப்பத்தைக் கொடுக்கும் வெண்ணொளி கிடைக்கிறது. மிகை வெப்பத்தைக் கொடுப்பதால் ஆக்சி-அசெட்டிலீன் சுவாலையை, வெண்ணெயைக் கத்தி வெட்டுவதுபோல், உலோகங்களை மிக எளிதாக வெட்டுதவற்கும், உலோககங்களை மிக எளிதாக வெட்டுவதற்கும், உலோகத் துண்டுகளை இணைப்பதற்கும் பயன்படுத்துகிறார்கள். 5 அடி கனமுள்ள இரும்புத் துண்டுகளைக்கூட இதனால் வெட்டலாம். இரும்புத் தொட்டிகளில் அடைத்து வைத்தால் அசெட்டிலீன் வெடிக்கும் தன்மையுடையது. ஆகையால் பயன்படுத்துவதற்குச் சற்றுமுன் கால்சியம் கார்பைடு சேர்மத்தை நீருடன் சேர்த்தே அசெட்டிலீனைப் பெறுகிறார்கள். செயற்கைப் பட்டு, ரப்பர் தரைவிரிப்புகள் முதலியன செய்வதற்கு வேண்டிய சேர்மங்களை இதிலிருந்த தயாரிக்கிறார்கள். கடலில் மிதக்ம் காப்பு மிதவைகளிலுள்ள ‘ஹோம்ஸ் விளக்கு’ (ழடிடஅநள’ள டiபாவ) களில் கால்சியம் கார்பைடும், கால்சியம் பாஸ்பைடும் சேர்ந்த கலவை இருக்கிறது. கால்சியம் கார்பைடு கடல்நீருடன் கலந்து அசெட்டிலீனைக் கொடுக்கும்; கால்சியம் கார்பைடு கடல்நீருடன் கலந்து அசெட்டிலீனைக் கொடுக்கும்; கால்சியம் பாஸ்பைடு காற்றில் பற்றிக் கொள்ளும். இதனால் அசெட்டிலீன் எரிந்து மிதவைக்கு ஒளி கொடுக்கிறது. அசெட்டிலீனை ஹைட்ரோ-குளோரிக் அமிலத்துடன் கலந்து ‘பாலியவயனில் குளோரைடு’ (ஞ.ஏ.ஊ.) என்ற பிளாஸ்டிக்கை உற்பத்தி செய்கிறார்கள். மின்கம்பிகளின் மேலுறை இவ்வகைப் பிளாஸ்டிக்கால் ஆனது. செலனிஸ் என்ற செயற்கைப் பட்டு உற்பத்தியிலும் பயன்படுகிறது. அசெட்டிலீனை ஹைட்ரஜனுடன் சேர்த்தால் எத்திலீன் கிடைக்கும். எத்திலீன் வாயு காலிதீன் பிளாஸ்டிக்கு செய்யப் பயன்படும் முக்கிய மூலப்பொருள்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=அசெட்டிலீன்&oldid=2734002" இருந்து மீள்விக்கப்பட்டது